யூதருடைய ராஜாவானவர் எங்கே?
Where Is He, King Of The Jews?
58-12-21

1.	நான் நிச்சயமாகவே அதைப் பாராட்டுகிறேன். அது என்னுடைய முதல் கிறிஸ்துமஸ் அன்பளிப்பாயிருக்கிறது, ஆகையால் நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருந்தேன். நல்லது, என்னால் அதை திறந்து பார்க்க முயற்சிக்காமல் இப்பொழுது பிரசங்கிக்க முடிந்திருந்தால் நலமாயிருந்திருக்கும். நான் கிறிஸ்துமஸ் எதிர்பார்ப்புகளோடுள்ள, ஏதோ ஒன்றிற்காகக் காத்திருக்கும் ஒரு - ஒரு குழந்தையைப் போன்றிருக்கிறேன். ஒரு சிறு ஆச்சரியம் உண்டு என்றும், அதற்குள்ளாக இருப்பதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீங்கள் உணருவீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். உங்களுக்குத் தெரியும், நாம் வயோதிகமடையும்போது, நாம் நம்முடைய எல்லா குழந்தைப் பருவத் தன்மைகளை விட்டுவிடுவோம் என்று நான் கருதவில்லை. நீங்கள் அவ்வாறு கருதுகிறீர்களா? [சபையோர், “இல்லை '' என்கின்றனர். - ஆசி.) நாம் வளர்ந்த பிள்ளைகளாயிருக்கிறோம். அதுதான் அதைக் குறித்த காரியமாய் உள்ளது.
2. நல்லது, கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக! நாம் இந்த அருமையான கிறிஸ்துமஸ் பண்டிகைப் பருவக் காலையில் மீண்டும் இங்கிருப்பதும், நாம் கூட்டத்திற்கு செல்லும்போது, அவர் இருக்கிறார் என்று நான் நிச்சயமாய் அறிந்திருப்பதுபோல, கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் நம்மோடு தொடர்ந்திருக்கும்படியாக முன்னோக்கி எதிர்ப்பார்த்திருப்பதும் நமக்கு மகிழ்ச்சியாயுள்ளது.
3. இந்தக் காலையில் அவர்கள் சிறுபிள்ளைகளுக்காக சில அன்பளிப்புகளை வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இல்லையென்றால் - இல்லையென்றால் அது...... (சகோதரன் நெவில், "அதை ஏற்கெனவே எடுத்துக்கொண்டனர்" என்கிறார். - ஆசி.) சிறுபிள்ளைகளுடைய அன்பளிப்புகளை ஏற்கெனவே எடுத்துக் கொண்டனர். நல்லது, அது மிகவும் அருமையாயுள்ளது.
4. இப்பொழுது நேரமிருக்குமானால் இந்த நேரத்தில் நம்முடையக் கடந்த கூட்டத்தின் பேரிலான ஒரு சிறிய சுருக்கமான நிகழ்வு அறிக்கையைச் சற்றுக் கூற விரும்புகிறேன். (சகோதரன் நெவில், "ஆமென்” என்கிறார் - ஆசி.) இந்த ஆராதனைகளுக்குச் செல்ல நீங்கள்தான் எனக்காகத் தேவனைப் பற்றிக்கொண்டு ஜெபிக்கிற ஜனங்களாய் இருக்கிறீர்கள். எனவே நான் கடந்தக் கூட்டங்களின் நிகழ்வுகளைக் குறித்து ஒரு சுருக்கமான தொகுப்பினை எடுத்துரைக்க விரும்புகிறேன்.
5. கடந்த கூட்டத்தின் சம்பவங்களில் முதன்மையாய் கவனிக்க வேண்டிய ஒன்று..... விஸ்காசின்னில் உள்ள ஷாவனோ என்ற இடத்தில் நடை பெற்றதாயிருந்தது. அது நாங்கள் கிட்டத்தட்ட வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஆயத்தமானபோது, அது உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில், அந்தப் புதிய உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நிகழ்ந்தது. நான் பீட அழைப்பைக் கொடுத்தபோது, அநேகர் கிறிஸ்துவை தங்களுடையச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படி தங்களுடையக் கரங்களை உயர்த்தியிருந்தனர். அப்பொழுது என்னிடத்திலிருந்து சற்று தூரத்தில் சரியாகக் கூட்டத்தாரின் மத்தியில் ஒரு காரியம் சம்பவித்ததை நான் கவனித்தேன். அங்கே ஏறக்குறைய எழுபது அல்லது எழுபத்தைந்து வயதுடைய ஒரு வயோதிக மனிதன் இருந்தார். அவர் ஒரு மாரடைப்பினால் விழுந்து மரித்துப்போய்விட்டார். அப்பொழுது அவருடைய வாயிலிருந்து நுரைத்தள்ளி, அவருடைய ஆடைகளின்மேல் அந்த நுரைத் தண்ணீர் வழிந்தது. அச்சமயத்தில் அவருடைய மனைவியோ உண்மையாகவே பரபரப்படைந்து அவருடைய முகத்தைத் தேய்த்துத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
6. அது சத்துருவின் தந்திரமாயிருந்தது என்பதை நான் அறிந்துகொண்டேன். அவன் ஜனங்களை நிலைகுலையச் செய்யவே அந்தக் காரியங்களைச் செய்கிறான். பாருங்கள், அப்பொழுது, அவன் அதைச் செய்யும்போது, அது ஒரு பரபரப்புக்குள்ளாகிவிடுகிறது. அது கூட்டத்தில் அநேகமுறை சம்பவித்துள்ளது. அது மீண்டும் அதேவிதமாக அந்தப் பீட அழைப்பிற்கு முன்பாக அண்மையில் நியூ இங்கிலாந்தில் நிகழ்ந்த து.
7. எனவே ஜனங்களை பரபரப்பூட்டப்படுவதிலிருந்து தவிர்க்க.... நான்....... அந்தவிதமான நேரங்களில் பரிசுத்த ஆவியானவர் என்ன கூறுவார் என்பதைக் காணும்படிக்கு உங்களுடைய அறிவுத்திறனை உன்னிப்பாக வைத்திருக்க வேண்டும். காரணம், “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்றே நாம் வேதவாக்கியங்களில் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
8. அங்கேயோ அநேகத் தேவனுடையப் பிள்ளைகள், அவருடையப் பிரியர்கள் இருந்தனர். நான் அந்த மனிதனை தொடர்ந்து உற்று நோக்கியவாறு, அவருடைய வாயில் நுரைத்தள்ளியிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் பாருங்கள்..... ஒரு நபரை மரணம் தாக்கும்போது வழக்கமாகவே தண்ணீர் வெளிவருவதை எவருமே அறிவர். அப்பொழுது அவர்கள்.... அவருடைய மனைவியோ அவருடைய முகத்தைத் தேய்த்து துடைத்துக்கொண்டிருந்தாள். எனவே அவள் அந்தவிதமாக செயல்பட்டுக்கொண்டிருந்தாள். அப்பொழுது நான் ஜனங்கள் அவளை கவனித்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க, அவளுடைய சுயகவனத்திற்கு கொண்டுவர, “உன்னுடைய கணவருக்கு, எவரேனும் அவரைத் தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?” என்று கேட்டேன்.
9. அதற்கு அவளோ, “சகோதரன் பிரான்ஹாம், நான் எல்லாவற்றையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்” என்றாள். அவள் ஒரு - ஒரு லூத்தரன் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவளாயிருந்தாள்.
10. அப்பொழுது நான் ஜெபவரிசையை அழைத்து, ஜனங்களுக்காக ஜெபிக்கும்படி அவர்களை எழும்பிவரச் செய்யலாம் என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் அதைச் செய்வதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவரோ ஜனங்களை பெயரிட்டு அழைக்கும்படி கூட்டத்திற்குள் அவர்கள் மேல் அசைவாடத் தொடங்கினார். அப்பொழுது அது ஏறக்குறைய இரண்டு முறை அந்த வயோதிக நபர் மீது கடந்து சென்றது. அப்பொழுது சடுதியாக நான், “நாம் ஜெபம் செய்வோம்” என்றேன்.
11. நான் ஜெபிக்கத் துவங்கினபோது, இந்த மரணத்திடம், அவரை கட்டவிழ்த்து விடு” என்று கூறப்பட்டதை ஜெபிக்கும்போது நானே எனக்குள்ளாகக் கேட்டேன். அது கூறப்பட்டவுடனே அந்த மனிதன் ஜீவனையடைந்து தன்னுடையக் காலூன்றி எழும்பினார். அப்பொழுது முழு பட்டணமே கர்த்தர் செய்திருந்ததைக் குறித்து பரபரப்புக்குள்ளானது போன்றாகிவிட்டது.
12. அவ்வண்ணமே தொடர்ந்து மற்றக் கூட்டங்களிலும் நிகழ்ந்துள்ளது. மேலும் நான் உங்களுடைய அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்ளாமல், ஒரு சிறு சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். அது அண்மையில் லாஸ் ஏஞ்சலீஸ் என்ற இடத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது நான் சகோதரன் ஆர்கன்பிரைட் அவர்களோடு தங்கியிருந்தேன்.
13. அந்த இடங்களில் ஜனங்கள் எவ்வாறு தொலைபேசியில் அழைத்துக்கொண்டேயிருப்பார்கள் என்பதை உங்களில் அநேகர் அறிந்துள்ளீர்கள். அவர்கள் தேவையுள்ள ஜனங்களாயிருக்கிறார்கள். ஜனங்கள் ஜெபிக்க வேண்டும் என்று தொலைபேசியில் கூப்பிடுவதை நாம் குற்றஞ்சாட்டுகிறதில்லை. அந்த ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டியது நம்முடையக் கடமையாயுள்ளது.
ஆனால் இது வோ அங்கே பயங்கரமானதாயிருந்தது, ஏனென்றால் நாங்கள் கர்த்தர் செய்திருந்த அநேக மகத்தான காரியங்களைக் கூறியிருந்தோம். அதில் ஒன்று, இருபதிற்கு சற்று மேற்பட்ட வருடங்களாக ஒரு மனிதன் பக்கவாதமடைந்து தன்னுடையக் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர் அந்த மனிதனை சுகப்படுத்த, அவர் கூட்டத்திலிருந்து நடந்து வந்தார். அது சபைகளுக்கு மத்தியில் ஒரு சிறு எழுச்சியை துவக்கினது.
14. அதன் பின்னர் ஒரு நாள் காலையில் நான் தொலைபேசி மணி ஒலிப்பதைக் கேட்டேன். அப்பொழுது அந்தத் தொலைபேசியை எடுத்து பதிலுரைக்க என்னோடு தங்கியிருந்த சகோதரன் ஆர்கன்பிரைட் அவர்கள் அந்த நேரத்தில் அங்கிருக்கவில்லை. எனவே நான் தொலைபேசியை எடுத்து அதற்குப் பதிலுரைத்தேன். அதுவோ ஒரு மெக்ஸிக்கோ மிஷனெரியாக இருந்தது. அப்பொழுது அவரோ, "சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீர் இங்கே பட்டிணத்தில் இருந்தீர் என்பதே எனக்குத் தெரியாது” என்றார். மேலும் அவர், “நீர் கௌ பேலஸ் (Cow Palace) என்ற இடத்தில் எங்கோ ஒரு கூட்டம் நடத்தப்போகிறீர் என்பது எனக்குத் தெரியும்” என்றார். அவர் தொடர்ந்து, “இன்னும் ஐந்து மாதம் கூட பூர்த்தியாகாத ஒரு குட்டிப் பையன் எனக்கு உண்டு” என்றார். ஆனால், “அவன் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறான்” என்றார். மேலும், “இவ்வாறு ஜெபிக்க, அழைப்பது வழக்கமான முறையல்ல என்பது எனக்குத் தெரியும்” என்றும், " ஆனால் ஏதாவது இரக்கம் கிடைக்கும்படிக்கு நீர் வந்து அந்தச் சிறு குழந்தைக்காக ஜெபிப்பீரா?" என்று கேட்டார். அது உங்களுடையக் குழந்தையாயிருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
15. அப்பொழுது நான் - நான், “திரு. ஆர்கன்பிரைட் அவர்களை நான் தொலைபேசியண்டை அழைப்பேன், அப்பொழுது நீர் அந்த மருத்துவமனை எங்கே உள்ளது என்று அவரிடத்தில் கூறுங்கள், ஏனென்றால் நான் இந்தப்பட்டிணத்தை நன்கு அறிந்தவனல்ல.” என்று கூறினேன். நானூறு மைல் சதுரப்பரப்பளவு கொண்ட பட்டிணம். நான் அந்த மருத்துவமனையை ஒருபோதும் கண்டதேயில்லை.
அப்பொழுது திரு. ஆர்கன்பிரைட் வந்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள்.....” என்றார்.
அப்பொழுது நான், “இது நிச்சயமாகவே பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலாயுள்ளது என்பதை நான் உணருகிறேன்” என்றேன்.
16. ஆகையால் நாங்கள் அந்தப் பட்டிணத்தில் அங்கிருந்த மருத்துவமனைக்குச் சென்றோம். ஒரு மெக்ஸிக்கோ சகோதரர், அவர் அவ்வளவு வெள்ளை நிறமாயில்லாமலிருந்தாலும்கூட, என்னைவிட நிறமாகவே இருந்தார், ஏறக்குறைய என்னுடைய வயதினைக்கொண்ட ஒரு மனிதர். அவருடைய மனைவியோ ஒரு ஃபின்லாந்து பெண்மணியாய், சற்று இளம் பொன் நிறமான முடியினைக் கொண்டவளாய், மிகவும் அழகானப் பெண்மணியாயிருந்தாள். அவரோ ஒரு பெருந்தன்மையான மனிதனாய் இருந்தார். நாங்கள் மருத்துவமனைக்குள்ளாகச் சென்றோம்.
17. ஓ, நான் ஏராளமான காட்சிகளைக் காண்கிறேன், நாம் யாவரும் காணும்போது, அது நம்மைத் தொல்லைக்குட்படுத்தி, நம்முடைய உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வருகிறது, ஆனால் அதுவோ நான் எப்போதும் கண்டிருந்ததிலேயே மிக மோசமான ஒன்றாயிருந்தது. அவர்கள் அந்தச் சிறு குழந்தையை மருத்துவச்சி அறையண்டை, ஒரு சிறப்பு மருத்துவச்சியினால்... கொண்டுவர வேண்டியதாயிருந்தது. நான் பார்த்தபோதோ, அந்தப் புற்றுநோய் அந்தக் குழந்தையினுடைய சிறு தாடைகள் வரைக்கும் பரவிச் சென்றிருந்தது, எனவே அந்தப் புற்றுநோய்க் காயத்தின் தலைப்பகுதி வெடித்து பிளப்பதைத் தடுக்க அவர்கள் ஒரு துணியை சுற்றி வைத்திருக்க வேண்டியதாயிருந்தது. அந்தக் குழந்தையினுடைய சிறு தாடைகளிலிருந்து அந்தப் புற்று நோயினை வெட்டியெடுக்க மருத்துவர் முயற்சித்திருந்தபடியால், அந்த இடத்திலிருந்து அந்தச் சிறு தொண்டைப் பகுதி வரைக்கும் முன்னும் பின்னும் இந்தவிதமாக பெரிய பள்ளங்கள் உண்டாயிருந்தன. அது அந்தப் புற்றுநோயை மோசமான நிலையில் தீவிரமடையச் செய்திருந்தது. நான் அதை “பரப்பியிருந்தது” என்ற அந்த வார்த்தையில் அழைப்பேன், அதுவே சரியான வார்த்தையாயிருக்கும். அது அதனுடையக் குட்டி நாவுக்குள்ளாகவும் பரவிவிட்டிருந்தது, ஒரு சிறு குழந்தையின் வாய்ப்புறம், அதிகமாக அகன்றிடாமல், அந்தக் குட்டி நாவு வீக்கமடைந்து, கிட்டத்தட்ட அது வரைக்கும் வெளியே நீண்டு, கறுப்பு நிறமாக மாறிவிட்டிருந்தது, எனவே அது சுவாசத்தை அடைத்திருக்க, தன்னுடைய நாசிக்கு கீழேயிருந்தே சுவாசித்தது.
18. அந்தத் தகப்பனோ நடந்து இந்தச் சிறு குழந்தையின் பக்கத்தில் வந்து, "ஹலோ, ரிக்கி" என்று கூப்பிட்டார். மேலும், "அப்பாவினுடையக் குட்டிப் பிள்ளையே! ரிக்கி, அப்பா உனக்காக ஜெபிக்கும்படி சகோதரன் பிரான்ஹாம் அவர்களை அழைத்து வந்திருக்கிறேன்” என்றார். அச்சிறு குழந்தையோ தன்னுடையத் தகப்பனை அடையாளங்கண்டு கொண்டது.
19. அந்தக் குழந்தையினால் சுவாசிக்க இயலவில்லை, எனவே அவர்கள் அக்குழந்தையினுடையத் தொண்டையில் ஒரு துவாரத்தை உண்டுபண்ன சதையை துண்டிக்க வேண்டியதாயிருந்தது. அது ஒரு சிறு துவாரமாயிருந்தது. அது அநேக ஆண்டுகளுக்கு முன்னர் நாம் உபயோகித்து வந்த ஒரு சிறிய வட்டமான ஊதலைப் போன்று காணப்பட்டது. அது அதனுடைய சிறிய தொண்டையில் இருந்தது. அப்பொழுது அக்குழந்தை அந்த ஊதலி நூடாக சுவாசித்துக் கொண்டிருந்தது. அங்கே ஒரு மருத்துவச்சியோ எல்லா நேரத்திலுமே அருகில் தரித்திருக்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அந்த புற்றுநோயிலிருந்து வடியும் அழுக்கு நீர் சீழ் முதலியன...... இந்தச் சிறு துவாரத்தை அடைத்துக்கொண்டு மேலே வந்துவிடும். அப்பொழுது உடனே அவள் அந்தப் புற்று நோயிலிருந்து வடியும் அழுக்கு நீர் கொண்ட சீழினை இந்தவிதமாக வெளியே எடுத்துவிட வேண்டும். அந்தச் சிறு குழந்தையினுடையக் கரங்களோ சிறு பலகைகளில் வைத்து கட்டப்பட்டிருந்தன. எனவே அக்குழந்தையானது தன்னுடைய மூச்சுத் - திணறலின்போது தன்னுடையக் கரங்களினால் அந்த அழுக்குகளை எடுத்துப்போட முடியவில்லை. எனவே அங்கே எல்லா நேரத்திலுமே ஒரு மருத்துவச்சி இருந்துகொண்டேயிருந்தாள். ஆகையால் அது மூச்சுத் திணறத் துவங்கு போது, அவள் உடனே அருகில் சென்று அக்குழந்தையினுடையத் தொண்டைக் குழியிலிருந்து அந்தச் சிறு ஊதல் போன்றதிலிருந்து வெளிவரும் அந்தப் புற்றுநோயின் அழுக்கு நீர் கொண்ட சீழினையும் மற்றவற்றையும் எடுத்துப்போடுவாள்.
20. அந்தக் குழந்தையினுடையக் குட்டிக் கரங்கள் இந்தவிதமாய் அதனுடைய தந்தையை நோக்கியவாறு நீட்டியிருக்க, அதனுடையக் குட்டியான தலையோ பின்னாக இருந்தது. அதனுடைய சிறு...... நல்லது, நாம் சகோதரர்களும், சகோதரிகளுமாயிருக்கிறோம். அதனுடையச் சிறிய குழந்தை அணையாடை.... சிறு குழந்தையோ மொத்தத்தில் அந்த அளவு நீளமாயுங்கூட இருக்கவில்லை. இன்னும் ஐந்து மாதம் கூட பூர்த்தியாகமலிருந்தது, ஆனாலும் அந்தச் சிறியக் குழந்தையானது அதனுடையத் தந்தையை அடையாளங்கண்டுகொண்டதே! அவரோ, “ரிக்கி, அப்பாவினுடையக் குட்டிப் பையனே!” என்றார். ஓ, எப்படியும் அது ஓர் இரும்பு மனிதனுடைய இருதயத்தையும் உருக்கிவிட்டிருக்கும். அவர் அதனோடு விளையாட அல்லது அதனை இந்தவிதமாகத் தட்டிக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
21. அப்பொழுது நானோ அங்கு நின்றுகொண்டு, “கர்த்தராகிய இயேசுவே, நீர் எல்லா மனதுருக்கத்திற்கும் ஊற்றாகவும், எல்லா இரக்கங்களும் உமக்குள்ளாக இருக்குமேயானால், அப்பொழுது நீர் இந்தச் சிறு அன்புக்குரியக் குழந்தை இங்கே இந்தவிதமாகக் கிடந்து மரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு சந்தோஷமடைவீரா? அதைப் போன்ற அப்படிப்பட்ட நிலையில் உள்ளதைக் காண்பது சர்வவல்லமையுள்ள தேவனின் சித்தம் என்பதை - என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன், நம்பவும் முடியாதே” என்றே எண்ணினேன். மேலும் நான், “நீர் இரக்கத்தின் ஊற்றாயிருக்கிறீர். நீர் இரக்கத்தின் ஊற்றாயிருப்பீரேயானால், அப்பொழுது எப்படி உம்மால் இரக்கமுள்ள தேவனாயிருக்க முடிந்து, அதே சமயத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கண்டு களிகூர முடியும்?” என்று எண்ணிக்கொண்டேன். பின்னர், “நீர் இங்கே நின்று கொண்டிருந்திருந்தால், நீர் என்ன செய்வீர்?” என்றும் எண்ணினேன்.
22. நல்லது, இங்குள்ள என்னுடைய தனிப்பட்ட சிறு குழுவினர் நான் ஒரு மதவெறியனா என்பதைப் போதுமான அளவிற்கு நன்றாகவே என்னைக் குறித்து அறிந்திருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். எனக்கு அது தெரியாது. நான் விரும்புகிறது எந்தக் காரியமாயிருந்தாலும், நேர்மையாயிருக்க வேண்டும். நான் தேவனை சந்திக்கும்போது, ஒரு நேர்மையான இருதயத்தோடு அவரை சந்திக்க விரும்புகிறேன். எப்படிச் செய்ய வேண்டும் என்று நான் அறிந்துள்ள மிகச் சிறந்த முறையில் நான் செய்திருக்கிறேன்.
23. நான் , “கர்த்தாவே, நீர் இங்கே நின்று கொண்டிருந்திருந்தால், அப்பொழுது நீர் என்ன செய்வீர்?” என்று கூறினபோது, ஏதோ ஒன்று என்னிடத்தில் பேசினது. மேலும் அது திரும்பவும் “நீ என்ன செய்வாய் என்பதைக் காணவே நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று உரைத்தது.
24. அப்பொழுது நான் அந்தச் சிறு குழந்தையை நோக்கிப் பார்த்து, அந்தச் சிறு குழந்தையினுடையக் கரத்தைப் பற்றிப் பிடித்தேன், அந்தவிதமாக அகலமாய் அல்ல, இந்தவிதமாய் என்னுடைய விரல்களில் அதை வைத்து பிடித்துக்கொண்டேன். அதன்பின்னர் நான், “தேவனில் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலம் இந்தப் புற்றுநோய்க்கும் குழந்தைக்குமிடையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை வைக்கிறேன்” என்று கூறிவிட்டு, திரும்பி நடந்து வெளியே சென்றேன். அந்தத் தகப்பனோ என்னோடு கூடவே வந்தார். என்னால் அதற்குமேல் ஒன்றுமே கூறமுடியாமலிருந்தது.
25. பின்னர் நான் காரில் ஏறச் சென்றபோது, அவரோ, "சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, இதோ நான் உங்களுக்காக சேமித்து வைத்திருந்த ஒரு சிறு தசமபாகம்” என்றார்.
26. அப்பொழுது நானோ, “ஓ, இரக்கமுள்ள சகோதரனே, அதைக் கொடுக்காதீர்கள்” என்றேன். மேலும் நான், “வேண்டாம். நான் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்றேன்.
27. ஆயினும் அவர், "இது ஊழியத்திற்கு செலவிடுகிற தசமபாகமாய் உள்ளது'' என்றார். மேலும், “நான் என்றோ ஒரு நாள் உங்களைக் காண்பேன் என்று எண்ணியே இதனை சேமித்து வைத்தேன்” என்றார்.
28. அதற்கு நானோ, “அதனை அங்குள்ள ரிக்கியினுடையக் கட்டணத்திற்கு செலவு செய்யுங்கள்'' என்றேன். மேலும் நான், "அவனுக்கு, அவனுக்கே அது தேவைப்படும்” என்றேன். எனவே பின்பு நான் வீட்டிற்குப் புறப்பட்டு சென்றுவிட்டேன்.
29. அப்பொழுது அந்த நேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் அந்தச் சிறிய தாடைகள் பின்னோக்கிச் சென்று இயல்புநிலைக்குள்ளாகி, அந்த நாவும் அவனுடைய வாய்க்குள்ளாகவே திரும்பி இயல்புநிலையடைந்தது. தயவுள்ள அன்பின் இரக்கமான நேசப் பிதா அந்தக் குழந்தையைக் குணப்படுத்தும்படிக்குப் பொருத்திச் சரிப்பார்த்திருந்தார். அடுத்தநாள் காலையில் அந்தக் குழந்தை ஒரு சுகமான குழந்தையாய் வீட்டிற்கு அனுப்பப்படப் போவதாயிருந்தது.
30. அப்பொழுது நான் அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது...... சந்தேகத்திற்கு இடமின்றி அந்தச் செய்தி மேற்கு கரையில் பரவினது. எனவே இங்குள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவர் மிகத்தொலைவில் உள்ள பேசடென்னா (Pasadena) என்ற இடத்திலிருந்துத் தன்னுடையப் பேரக்குழந்தையை அனுப்பி, அந்தக் குழந்தைக்காக ஜெபிக்கும்படி அங்கேயிருந்த பாதைத் தடையில் நிற்கும்படிச் செய்திருந்தார். அந்த மருத்துவர் அங்கே அந்தக் குழந்தைக்கு ஒரு பென்சிலின் தடுப்பு ஊசி போட்டிருந்தார், அதுவே ஏறக்குறைய அந்த இரண்டு வயது கொண்ட சிறு குழந்தைக்கு அதனுடைய பக்கவாட்டில் புற்றுநோய் வரக் காரணமாயிருந்தது.
31. எனவே அவர் இந்த மெக்ஸிக்கோ மிஷினெரியை அழைத்து, "நான் புறப்பட்டு செல்வதற்கு முன்னர் சகோதரன் பிரான்ஹாம் அவர்களை நான் காண வேண்டும்” என்று கூறியிருந்தார். அப்பொழுது நானும் மனைவியும் ஏற்கெனவே காரில் அமர்ந்திருந்தோம்.
32. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ வர்த்தக புருஷர்களோடுத் திரும்பாத நதி என்ற இடத்தில் ஒரு மீனைப் பிடித்திருந்தேன். அப்பொழுது வால்ட் டிஸ்னி என்ற அந்தக் குழுவினரும் அங்கிருந்தனர், அவர்கள் தோற்பாவைக் கலைஞரை (taxidermist) உடன் வைத்திருந்தனர், ஏனென்றால் நான் பிடித்த அந்த கலிபோரினியா நன்னீர் மீன் (rainbow trout) உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. நான் காரில் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.
33. அப்பொழுது ஒரு சிறு வாகனம் எனக்குப் பின்னே வர, அதிலிருந்த இந்த மெக்ஸிக்கோ தகப்பனார் குதித்து இறங்கினார். அவருடையக் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, அவரோ ஓடி வந்து தன்னுடையத் தொப்பியைக் தழற்றியவாறே நின்றார், அவருடைய ஃபின்லாந்து மனைவியும் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, கர்த்தர் உங்களுக்கு அனுப்பின அந்தத் தசமபாகம் இதோ உள்ளது” என்றார்.
"ஓ,”நானோ, “சகோதரனே!” என்றேன்.
அப்பொழுது அவரோ, “உங்களுக்குத் தெரியுமா? ரிக்கி இன்றைக்கு வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறான்” என்றார்.
34. அப்பொழுது நான் , “ அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்றேன். அவர்....... நான், “ஆனால் நான் தான் இந்தத் தசமபாகத்தை எடுத்து ரிக்கியினுடையக் கட்டணத்திற்குச் செலவு செய்யுங்கள் என்று உங்களிடம் கூறியிருந்தேனே” என்றேன்.
35. அதற்கு அவர், “சகோதரன் பிரான்ஹாம், அவர்களே, அதைக் குறித்துதான் நான் உங்களிடத்தில் கூற வேண்டியதாய் இருக்கிறது'' என்றார். மேலும் அவர், “நான் இந்தக் காலையில் கட்டணத்தைச் செலுத்த மருத்துவரிடம் சென்றபோது, நான் இந்தப் பணத்தை அவரிடத்தில் வைத்தேன்” என்றார். அப்பொழுது நான், “மருத்துவரே, நான் இந்த இரசீதின் பேரில் உங்களுக்குப் பணம் செலுத்த வேண்டும்” என்றேன். அதற்கு அவரோ, “திருவாளரே, அதைக் குறித்து என்னிடத்தில் கூறவும் கூட வேண்டாம். நீர் எனக்கு ஒன்றுமே செலுத்த வேண்டியதில்லை” என்றாராம், மேலும் அவர், “நான் என் வாழ்நாள் முழுவதிலும் கண்டதிலேயே மிக மகத்தானதாய் செய்யப்பட்டதாகக் கண்டக் காரியம் அதுவேயாகும்” என்றாராம். தொடர்ந்து அவர், 'அது அதிசயத்திலும் அதிசயமாயிற்றே!' என்று கூறினாராம். பின்னும் அவர், “எனவே நீர் எனக்கு ஒரு பைசாகூட செலுத்த வேண்டியதில்லை” என்றேக் கூறிவிட்டாராம்.
36. அது ஜீவனுள்ள தேவன் இன்னமும் ஜீவிக்கிறார் என்பதையே காண்பிக்கிறது. இப்பொழுது நாம் அவருடைய......... திறப்பதற்கு முன்னர்....... ஓ, இன்னும் அநேகக் காரியங்கள் சம்பவித்திருக்கின்றன. நான் அதை உங்களிடத்தில் கூற எனக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும், ஆனால் அதற்கோ நேரம் போதுமானதாயிராது.
37. இப்பொழுது வருகிற வருடத்தின் முதலில், ஜனவரி மாதத்தில் நான் மீண்டும் கடல் கடந்து செல்கிறேன். ஏனென்றால்...... நான் ஜனவரி மாதத்தில் ஜமாய்க்காவில் உள்ள கிங்ஸ்டனில் குதிரைப் பந்தைய மைதானத்தில் இருப்பேன், அதன்பின்னர் அங்கிருந்து பியூரிடோ ரிக்கோ முதலிய இடங்களுக்குச் செல்வேன்.
38. எனவே நாம் நம்முடைய மகத்தான அன்பின் கிறிஸ்துவண்டை ஜெபிக்க சற்று நேரம் நம்முடையத் தலைகளை நாம் தாழ்த்துவோமாக.
39. ஓ கர்த்தாவே, நீரே ஒவ்வொரு தலைமுறையிலும் எங்களுக்கு அடைக்கலமாய் இருந்து வருகிறீர். நீரே ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையாயிருக்கிறீர். உம்முடைய அன்பின் பிரசன்னம் ஒருபோதும் தவறிப்போகிறதில்லை என்றும் அதுவே எங்களுக்கு முன்பாக செல்கிறது என்பதையும் அறிந்துள்ளோம். கர்த்தருடையத் தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கியிருக்கிறார் என்று நாங்கள் போதிக்கப் பட்டிருக்கிறோம்.
40. கர்த்தாவே, நாங்கள் உமது கரத்தின் பிரஜைகளாயிருக்கிறோம். என்றும், என்றோ ஒரு நாள் உமது தெய்வீக நியாயத்தீர்ப்பில் நிற்போம் என்று அறிந்துகொள்ளும்படியான அந்தத் தேவ பக்திக்குரிய பயத்தை எங்கள் மீது கெண்டு வாரும். நாங்கள் அறிந்துள்ள ஒரே ஒரு பரிகாரம் மாத்திரமே உண்டு, அது உம்முடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தம் எங்களுக்காகப் பரிந்து பேசுகிறது என்றும், அதுவே இந்தக் காலையில் சர்வவல்லவரின் பிரசன்னத்தில் அவருடைய தகுதியின் மூலம் எங்களை அவரண்டை ஒப்புரவாக்குதலுக்குள் கொண்டுவருகிறது என்பதைக் குறித்து உம்முடைய வார்த்தை போதிக்கிறது. ஆகையால் தகுதியற்ற எங்களுக்கு அந்தக் கிருபை அருளப்பட்டிருக்கிறது, நாங்கள் இதற்காக அவரை நேசிக்கிறோம். நாங்களோ.....
41. நீர் செய்திருக்கிற நூற்றுக்கணக்கான மகத்தானக் காரியங்கள் எங்களுடைய சிந்தையில் இருக்கின்றன. அவை எல்லாவற்றிலும் மகத்தானது என்று நாங்கள் நினைத்துப் பார்க்க முடிந்ததோ பாவத்தினிமித்தமாகவும், அக்கிரமத்தினிமித்தமாகவும் எங்களுக்குள் வாசம் செய்த மரணத்திலிருந்து ஜீவனுக்கு நீர் எங்களை இரட்சித்ததேயாகும். ஆனால் அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவருடைய வார்த்தையின்படி.... ஏனென்றால், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் அதை விசுவாசிக்கிறோம், அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம், அதைப் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் சாட்சியிடுகிறோம்.
42. இப்பொழுது இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவான, இந்த உலகத்தினுடைய சரித்திரத்தின் கடைசி மணி வேளையில் நாங்கள் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வதற்காக, ஓ, தேவனே, உமக்கு நன்றியுள்வர்களாயிருக்கிறோம். மிகுந்த குழப்பமான சிந்தை உள்ளபோதோ, நீர் உம்முடையப் பரிசுத்தத் தீர்க்கதரிதிகளினூடாக, “ஜனங்கள் இங்கும் அங்கும் ஓடுவார்கள்” என்றும், அதாவது இந்த நாளில், “உண்மையான தேவனுடைய வார்த்தையைக் கேட்க மனுஷர் கிழக்கிலிருந்து மேற்கிற்கும், வடதிசையிலிருந்து தென்திசைக்கும் சென்று தேடும் ஒரு நேரம் வரும்” என்று உரைத்திருக்கிறீர். நாங்கள் அந்த நேரத்தைக் காணும்படி ஜீவித்துள்ளோம்.
43. நீர் உம்முடைய சிலுவையேற்றத்திலிருந்து உம்முடைய வருகை வரையிலுமே, “ஒரு நேரம் உண்டாகும் என்றும், அதாவது ஒருநாள் உண்டு; அது பகலுமல்ல இரவுமல்ல. அது மப்பும் மந்தாரமான நேரமாயிருக்கும்” என்றும், எப்படி செயல்புரிய வேண்டும் என்பதைக் காண போதிய வெளிச்சம் இருக்கும் என்றும் நீர் முன்னுரைத்தீர். ஆனாலும் நீரோ, “சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்” என்று கூறினீர். கிழக்கில் காட்சியில் எழும்பின அதேக் குமாரன், அதே கிறிஸ்துவே. பூகோள சாஸ்திரப்படி சூரியனோ பூமியின் கிடை நிலையான பாகத்தைக் கடந்து, இப்பொழுது மேற்கில் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் அதே தேவ குமாரன் தம்முடைய வேதவாக்கியங்கள் தவறிப்போகமல் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைக் காண்பிக்கும்படியாய் இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய ஆவியை அனுப்புகிறார்.
44. இந்த மகத்தான கிறிஸ்துமஸிற்கு முந்தின நாளில் நாங்கள் அறிந்துள்ளதோ கொஞ்சமே, ஆனால் இதுவே ஒருகால் நாங்கள் ஒன்று சேர்ந்து அமர்ந்திருப்பதான கடைசி ஒன்றாயிருக்கலாம். எனவே ஜீவனுள்ள தேவ குமாரன் இந்தக் காலையில் எங்கள் மத்தியில் வாசம் செய்து, அவருடையத் தயவையும், அவருடைய இரக்கத்தையுங் குறித்து எங்களிடம் பேசி, எங்களுடையப் பாவங்களின் மன்னிப்பை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.
45. கர்த்தாவே, அந்தச் சிறு குழந்தை ரிக்கியை ஜீவிக்கும்படி செய்தவர், மரித்துப்போனவரை உயிரோடெழுப்பின அதே தேவன் துன்பப்படுகின்றவர்களையும், உம்முடைய சுகமளித்தலின் தொடுதல் தேவைப்படுவோருக்கும் நீர் இந்தக் கடைசி நாளில் செய்வதாக வாக்குரைத்துள்ளபடியே நீர் செய்வீர் என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம். உம்முடைய வார்த்தைகள் சத்தியமுள்ளவைகளாயிருக்கின்றன. நீர் இக்காலையில் இங்கே சர்வவியாபியாயிருக்கிறீர் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்ய சித்தமுள்ளவராயிருக்கிறீர் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். பிதாவே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் உம்பேரில் காத்திருக்கிறோம். ஆமென்.
46. இப்பொழுது இன்றிரவு கர்த்தருக்குச் சித்தமானால், நான் ஒரு சுவிசேஷ ஆராதனையாக நடத்த விரும்புகிறேன். நம்முடைய மிகுந்த கனிவார்ந்த அன்பிற்குரிய போதகர் இன்றைக்கு என்னை இரண்டு ஆராதனைகளையுமே நடத்தும்படிக் கேட்டுக் கொண்டிருக்கிற காரணத்தால் என்னுடைய செய்தி எங்கேயிருந்து இருக்கும் என்பது இன்னமும் சரியாகத் தெரியவில்லை. நான் தேவனுடையக் கிருபையினால் அதைச் செய்ய முயற்சிப்பேன். எனவே நான் மேசியாவின் வருகை அல்லது அந்தக் காரியத்தைக் குறித்த ஏதோ ஒன்றை அல்லது அந்த ஒழுங்கின் பேரிலேயே இன்றிரவு பேச விரும்புகிறேன்.
47. இந்தக் காலையில், இது கிறிஸ்..... கிறிஸ்துமஸிற்கு முந்தின ஞாயிறாயிருக்கிறபடியால், சற்று முன்னர் ஞாயிறு பள்ளியிலிருந்து கலைந்து இப்பொழுது சபையில் தங்களுடைய இடத்தில் அமர்ந்திருக்கிற சிறு பிள்ளைகளும் புரிந்து கொள்ளும்படியான ஒரு சிறிய, நாம் அழைக்கும் ஒரு கிறிஸ்துமஸ் பாடப்பொருளில், அதைக் குறித்த ஒன்றின் பேரில் பேசலாம் என்று நான் நம்புகிறேன்.
48. நாம் அவருடைய வார்த்தையை வாசிக்கப் போகின்ற காரணத்தால், புனிதமான வேதவாக்கியங்களுக்கு திருப்ப வாஞ்சிக்கிறவர்கள், என்னோடு சேர்ந்து பரிசுத்த மத்தேயுவினுடைய சுவிசேஷம் 2-ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள்.
49. ஆராதனையோ ஏழு முப்பது மணிக்குத் துவங்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அது சரிதானே, சகோதரனே, அப்படித்தானே? [“சகோதரன் நெவில், “ஏழு முப்பது மணிக்கு” என்கிறார். ஆம்”. - ஆசி.] இன்றிரவு சரியாக ஏழு முப்பது மணிக்குத் துவங்கும். அது கிட்டத்தட்ட ஒரு மணி நேர ஆராதனையாய், ஒரு பிரசங்க ஆராதனையாய் இருக்கும்.
50. இப்பொழுது உங்களுடைய வேதாகமங்களை திறந்து வைத்திருப்போரே, நான் ஒரு பாடப் பொருளுக்காக இதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு வசனங்களை வாசிக்க விரும்பி, தேவன் நமக்கு பொருத்தமான சந்தர்ப்பத்தை அளிக்கும்படிக்கு ஜெபிக்க விரும்புகிறேன்.
ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
யூதருக்கு ராஜவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
51. அவர்கள் மட்டுமீறிய களைப்புற்றிருந்திருக்க வேண்டும். நீங்கள் பாருங்கள், கட்டளையோ அவசரமானதாயிருந்தது. அது இராஜாவினுடையக் கட்டளையாயிருந்தது, ஆகையால் அது நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்தது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிற அந்த மகத்தான அப்படிப்பட்ட ஒரு காட்சியில், அந்த முதல் கிறிஸ்துமஸில், அந்த நேரத்தில் அப்படிப்பட்ட ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது விநோதமாகத் தென்படும். ஆனால் நீங்கள் பாருங்கள், பரலோகத்தின் தேவன் எல்லாக் காரியங்களையும் இயேசு கிறிஸ்து மூலமாக முன்குறித்திருக்கிறார், அந்த ஒவ்வொரு காரியமும் அவருடைய மகத்தான சித்தப்படிக் கிரியை செய்ய வேண்டும். அவர்கள் அங்கே பெத்லகேமின் மேற்குப் பாகத்தில் நின்றனர்.
52. நீங்கள் யூதேயாவிலிருந்து வரும்போது, நீங்கள் ஒரு மலையின் மேல் ஏறி, கரடுமுரடான பாறைப் பாங்கான வனாந்திரத்தை , பாலைவனத் தேசத்தைக் கடக்க வேண்டும். அது பெத்லகேமின் பிரதான வீதிகள் ஒன்றிலிருந்து செல்கிறது. அங்கே வீதி என்றழைக்கப்படுகிற ஒரு பாதை மலைக்கு மேலே செல்கிறது. அது மிருக ஜீவன்கள் நடந்து சென்றுள்ளதான ஒரு சிறு ஒற்றையடி பாதையைப் போன்றதேயல்லாமல் வேறொன்றுமில்லை என்பதையே நாம் இங்கே கண்டறிவோம். ஏனென்றால் அது ஒரு கழுதையினுடைய பாதையாய், கழுதைகளும் ஒட்டகங்களும் பெத்லகேமிலிருந்து யூதேயாவுக்குள் செல்லுகிற வழித்தடமாயிருந்தது.
53. நீங்கள் மேலே யூதேயாவிலிருந்து பெத்லகேமிற்கு வரும்போது, மலையுச்சியைக் கடந்து செல்ல வேண்டும். அங்கே ஒரு பெரிய பாறை இருக்கும், அது இந்தக் கட்டிடத்தில் மூன்றில் ஒரு பங்காய் இருக்கும். எனவே அது ஏறக்குறைய அங்கே நீளமானப் பாறையாய் இருந்திருக்க வேண்டும், ஆகையால் அவர்கள் கோவேறு கழுதைக்கு ஒரு சிறு இளைப்பாறுதலைத் தரும்படிக்கு அங்கு நின்றுவிட்டு, பிறகு மலையின் மேல் ஏறிச் சென்றனர். யோசேப்போ மிகவும் களைப்புற்றிருந்தான், ஏனென்றால் அவன் பெத்லகேமுக்குச் செல்ல அந்த நாளில் மிகவும் துரிதப்படுத்தப்பட்டிருந்தான்.
54. காரணமென்னவென்றால், ஒவ்வொரு நபரும் குடிமதிப்பு எழுதும்படிக்குத் தாங்கள் பிறந்த இடத்திற்குத் திரும்பி வரவேண்டும் என்று ஏரோதினிடத்திலிருந்தும், அகுஸ்துராயனிடத்திலிருந்தும் பிறந்த ஒரு கட்டளையாய் அது இருந்தது. வரிச்சுமைகளே எப்பொழுதும் எல்லா தேசங்களையும் சீரழித்து வந்துள்ளது. விழுந்துபோன ஒவ்வொரு தேசமும் அதனுடைய வரிச்சுமைகளினாலேயே விழுந்துபோயிருந்தன. அவர்களோ குடிமதிப்பு எழுதப்பட்டிருந்தனர்.
55. ஓ, ஒரு ஸ்திரீயை அப்படிப்பட்ட அவளுடைய அந்த நிலைமையில், வீட்டிலிருந்து கொண்டுசெல்ல, அவளுடைய அந்த நிலைமையில் வீட்டிலிருந்து தூரமாக அழைத்துக்கொண்டு செல்ல இரும்பு இதயங்கொண்ட ஒரு மனிதனே வேண்டியதாயிருந்திருக்கும். ஏனென்றால் அவள் எந்த நேரத்திலும் தாயாக வேண்டியவளாய் இருந்தாள் என்பதை நீங்கள் பார்க்கலாம். அவள் வெறுமென ஒரு பெண்ணாய் இருந்தாள், சுமார் ஏறக்குறைய....... அவள் தன்னுடைய பதினெட்டு, பத்தொன்பது வயது பருவத்தினை உடையவளாய் இருந்திருப்பாள் என்று நம்புகிறேன். அப்பொழுது அவள் அந்தச் சிறு கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டிருக்க, அவர்கள் சிறிது நேர இளைப்பாறுதலுக்காக நின்றபோது, அந்தச் சிற கழுதையோ பெருமூச்சுவிட்டது.
56. அப்பொழுது யோசேப்போ, அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அதன் முனை வரையிலும் நடந்து சென்று பெத்லகேமை நோக்கிப் பார்த்தான். காலங்களினூடாக வர வேண்டியிருந்த ஜனங்களின் உதடுகளில் அந்த இரவு பாடப்படும் என்பதை உலகம் அறிந்திருக்கவில்லையே! யோசேப்போ, அவன் அந்தப் பட்டணத்தை நோக்கிப் பார்த்து, ஜனங்களின் சண்டையைக் கண்டான். சிலர் தங்களுடைய வரிப்பணத்தைச் செலுத்த முயன்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவன், “அன்பே, உனக்குத் தெரியுமா, இன்றிரவு உன்னைத் தங்க வைக்க உணவு விடுதியில் நமக்கு ஓர் இடம் கிடைக்குமா என்றே நான் சந்தேகப்படுகிறேன். ஜனங்கள் உறங்குவதை என்னால் காண முடிகிறது. உறங்குவதற்கே அவர்கள் எங்கேயாவது இடத்தைக் கண்டறிய வேண்டியதாய் இருக்கிறது. கிட்டத்தட்ட சுற்றிலுமுள்ள எல்லா பிரதேசங்களிலுமிருந்தும் இந்தக் குடிமதிப்பிற்காக வந்திருக்கிறார்கள்” என்று அதைப் போன்றே ஏதோ ஒன்றைக் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
57. ஆனால் விநோதமென்னவென்றால் அவன் ஆச்சரியத்தில் தன்னுடைய மனைவியை நோக்கிப் பார்க்கும்படி திருப்பியபோது, அவள் பதில் கூற முடியாதவளாயிருப்பது போன்று தென்பட்டது. அவளுக்கு என்ன சம்பவித்திருந்தது என்பதைக் காண அவன் தன்னுடைய தலையைத் திருப்பினபோது, அவளுடைய முகத்தில் ஒரு வெளிச்சம் இருந்ததை அவன் கவனித்தான், அது இதற்கு முன்பு அவன் ஒருபோதும் அதைக் கண்டிராததுபோன்று இருந்தது. அவளுடைய அருமையான புருவத்திற்குக் கீழிருந்த அவளுடைய கண்கள் மேல்நோக்கியவாறு தென்பட்டிருக்க, அவளோ ஆகாயத்தையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்க, அவளுடைய முகத்திலோ ஒரு பரலோக ஒளி ஒளிர்வதைப் போன்றிருந்தது. அப்பொழுது அவனோ திரும்பி தன்னுடையக் கரத்தினால் அவளைத் தொடுகிறான்.
58. முடிவிலே அவள் அவனை நோக்கிப் பார்த்து, “யோசேப்பே, அப்பால் தொங்கிக்கொண்டிருக்கிற அந்த நட்சத்திரத்தை நீ கவனித்தாயா? என் ஜீவியம் முழுவதிலும் நான் கண்டதிலேயே மிகவும் பிரகாசமான நட்சத்திரமாய் அது இருப்பது போன்று தென்படுகிறதே. அது பெத்லகேம் என்னும் கிராமம் முழுவதிற்குமே வெளிச்சமளிப்பது
அஸ்தமித்தது முதற்கொண்டே நான் அந்த நட்சத்திரத்தை கவனித்து வருகிறேன், அது நம்மைப் பின்தொடர்ந்து வருவதைப் போன்று தென்படுகிறதே” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
59. அப்பொழுது யோசேப்போ, “ஆம், அன்பே, நான் - நான் வழக்கத்திற்கு மாறான விசேஷித்த ஒன்றைக் காண்கிறேன், ஏனென்றால் அது முழு ஆகாயத்திலுமே மிகவும் பிரகாசமான நட்சத்திரமாய் இருப்பது போன்றே தென்படுகிறது'' என்று இந்த விதமான ஏதோ ஒன்றை அவன் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. நிச்சயமாகவே அது உண்மையாயிருக்கிறது.
அவர் பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம், (புலவன் அவரைக் குறித்து உணர்த்தியது போன்றே) என் ஆத்துமாவிற்கோ பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்.
60. அவன் தன்னுடையக் கரங்களை எடுத்து மென்மையாய் கர்ப்பமானத் தன்னுடைய இனிய இருதயத்தின் இடுப்பண்டை சுற்றிப்போட்டு அணைத்து, தன்னுடைய மனைவியை கழுதையிலிருந்து தூக்கி, அவளைச் சுமந்து சென்று அங்கிருந்த கற்பாறையின் மீது அவளை அமரச் செய்தார். எனவே அப்பொழுது பாரம் சுமந்த சிறு கழுதையினால் இளைப்பாற முடிந்தது.
61. அப்பொழுது அவள் தன்னுடையக் கரங்களை மென்மையாய் அவனுடைய தோள்களின் மேல்போட்டு, “யோசேப்பே, இவையாவுமே இரகசியமாயுள்ளது என்பதை நாம் இருவரும் உணர்ந்துள்ளோம். நம்மால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நாம் இருவரும் விசுவாசிகளாயிருக்கிறோம், யேகோவா வருங்காலப் பயனீட்டில் ஏதோ ஒன்றை வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அதாவது அவர் நம்மைத் தெரிந்துகொண்டார், இன்றைய உலகத்தின் ஸ்திரீகளுக்கு மேலாக இந்தச் செய்தியை என்னுடைய இருதயத்தில் முழுமையாய் மறைத்துவைக்க வேண்டும் என்று என்னைத் தெரிந்து கொண்டார்” என்று இதைப் போன்ற ஒன்றைக் கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. நீங்கள் பாருங்கள், உலகமோ அது முறைதவறிப் பிறக்க வேண்டிய குழந்தையாயிருந்தது என்று எண்ணியிருந்தது, ஆனால் மரியாளோ உண்மை என்னவாயிருந்தது என்பதை அறிந்திருந்தாள்.
62. இன்றைக்கும் அநேக ஜனங்கள் அதேக் காரியத்தை எண்ணுகிறார்கள், அதாவது, “இந்தக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிற ஜனங்களை” அவர்கள், “இவர்கள் ஒருவிதமான பைத்தியம் பிடித்தவர்கள் அல்லது துர் கீர்த்திகொண்ட நபர்கள்” என்றே கருதுகிறார்கள். ஆனால் அந்த ஆவியை, அந்த விசுவாசத்தை தங்களுடைய இருதயத்தில் தொட்டிலிட்டு சுமந்துள்ளவர்களுக்கோ, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அவர்களே அறிந்துள்ளார்கள். எந்தக் காரியமும் அதை தொல்லைப் படுத்துகிறதில்லை.
63. ஒரு சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய நல்ல நண்பர் ஒருவர் என்னை அழைத்து, மனோத்தத்துவத்தையும், மனநிலை ஆய்வினையும் ஆய்ந்து படிக்கிற ஒரு நபரிடத்தில் பேசிக் கொண்டிருந்ததைக் கூறினார். இந்த நபரோ என்னுடையப் புத்தகத்தைப் படித்திருந்தார். அவர்களோ, "ஒருவன் ஓர் ஆவிக்குரிய மனிதனாயிருந்தால், அப்பொழுது ஆழ்ந்த ஆவிக்குரிய ஜனங்களுக்கும் பைத்தியத்திற்கும் இடையே ஒரு நூல் இழைப்போன்ற வித்தியாசம் மாத்திரமே உண்டு என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்களாம். அந்த நபர், சரியாகக் கூறினால், பயமுறுத்தப்பட்டிருந்தார்.
64. அப்பொழுது நானோ, "அதை விநோதமாக எண்ணாதீர்கள். நம்முடையக் கர்த்தர் பைத்தியம் என்றழைக்கப்பட்டார். அவருடைய சீஷர்கள் எல்லோருமே பைத்தியம் என்றழைக்கப்பட்டனர். அவரை தொழுதிருந்த எல்லோருமே பைத்தியம் என்றே அழைக்கப்பட்டனர். மகத்தான பவுலும், “மதபேதம் என்று அழைக்கிறபடியே நான் என் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்துள்ளேன்” என்றான். அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் அல்ல. ஆனால் உலகத்திற்கோ , சுவிசேஷ பிரசங்கமானது கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது. ஆனால் அதுவோ விசுவாசிப்பவர்களை இந்தப் பைத்தியத்தினூடாக இரட்சிப்பது தேவனுக்குப் பிரியமாயிற்று.
65. அவர்கள், இந்த எளிய தம்பதியினர் அங்கே அமர்ந்து அந்தப் பள்ளத்தாக்கினூடாக இந்த மகத்தான நட்சத்திரம் கிழக்கிலே பிரகாசிப்பதை நோக்கிப் பார்த்தனர். அதே சமயத்தில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு தொலைவில், தூரத்தில் உள்ள மலைகளுக்கும், சமுத்திரத்திற்கும் அப்பால் உள்ள இந்தியாவில் அங்கே வான சாஸ்திரிகளும் கூட கவனித்துக்கொண்டிருந்தனர்.
66. இப்பொழுது இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கிற இந்த வான சாஸ்திரிகள்....... அழைக்கப்பட்டனர்....... அவர்கள் உண்மையாகவே அறிஞர்கள், நட்சத்திரங்களையே உற்று நோக்கி கவனிக்கிற வான ஆராய்சியாளர்கள். அவர்கள் அப்பொழுது "ஞானவான்கள்'' என்றே அழைக்கப்பட்டனர். அவர்கள் இன்றைக்கு இன்னமும் அப்படிப்பட்டவர்களாகவே இருந்துவருகிறார்கள். நான் அவர்களோடு அநேக முறை பேசியிருக்கிறேன். அவர்கள் எப்பொழுதுமே மூவராய் செல்கிறார்கள், ஏனென்றால் மூன்று ஒப்புதல் அளிப்பதாய் இருக்கிறது. மேலும் மூன்று என்பது ஓர் உறுதி செய்தலாயிருக்கிறது. அண்மையில் நான் அவர்களை இந்தியாவில் வீதியில் உட்கார்ந்திருக்கக் கண்டேன், ஒருவிதமாக கால்களை மடக்கி சுருட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். முதலில் இருந்த இந்த வான சாஸ்திரிகளைப் போன்றே உடை உடுத்தியிருந்தனர். அவர்கள் தங்களை வேறுவிதமாக மாற்றிக்கொள்வதில்லை.
67. அவர்கள் ஒரே மெய்த் தேவனையே ஆராதிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் ஆபிரகாமிற்கு மற்றொரு மனைவியின் மூலமாகப் பிறந்த பிள்ளைகள். ஒரே மெய்த்தேவன் உண்டு என்றே அவர்கள் விசுவாசிக்கிறார்கள். நான் எத்தனையோ முறைகள் முகமதிய மதக்குருக்கள், “ஒரே மெய்யான ஜீவிக்கிற தேவன் உண்டு என்றும், முகமதுவே அவருடையத் தீர்க்கதரிசி” என்றும் வலியுறுத்திக் கூறித் தம்பட்டம் அடிப்பது போன்று கூச்சலிடுவதையும் நான் கண்டிருக்கிறேன்.
68. நாமோ, “ஒரே மெய்யான ஜீவிக்கிற தேவன் உண்டு என்றும், இயேசுவே அவருடைய குமாரன்” என்றும் கூறுகிறோம்.
அவர்களோ “தேவனுக்கு ஒரு குமாரன் இருக்கிறார் என்பதை நம்ப இயலாது” என்கிறார்கள்.
69. இந்தியாவில் ஒரே நேரத்தில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் அவருடையப் பிரசன்னத்தின் காரணமாகவும், அவர் செய்த அற்புதத்தினாலும் கிறிஸ்துவண்டை வருவதைக் காணும் சிலாக்கியம் பெற்றேன்.
70. இப்பொழுது இந்தியர்கள், நாம் வான சாஸ்திரிகள் என்று அழைக்கும் முதலில் இருந்த இவர்கள் வேதாகமத்தில் மேதிய பெர்சியர்களாகச் சுட்டிக்காட்டப்பட்டனர். நீங்கள் அதை தானியேல் இரண்டாம் அதிகாரத்தில் கண்டறியலாம். அந்தக் காரணத்தினால்தான் அந்த மிஷனெரி, “முகமதியனை அவனுடைய நம்பிக்கையிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது மிகவும் கடினமானதாயிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் மேதிய பெர்சியர்களிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்களுடையப் பிரமாணங்கள் திருத்தப்படுகிறதோ அல்லது மீறப்படுகிறதோ இல்லை” என்றும் கூறினார். வேதத்தை வாசிக்கிற உங்களில் அநேகருக்கு அது தெரியும், மேதிய பெர்சியர்கள், அவர்கள் தங்களுடையப் பிரமாணங்களைத் திருத்துகிறதில்லை. ஒரு காரியம், ஒரு அறிவிப்புச் செய்தி கூறப்பட்டபோது, அது நித்தியமாக நீடித்தது. ஆகையால் ஒரு முகமதியன் தன்னுடையத் தடையை மீறி கிறிஸ்தவ மார்க்கத்திற்குச் செல்லும் போது, எல்லாமே அவனுக்கு மரித்ததாகிவிடுகிறது, ஏனென்றால் அவன் அவர்களுடைய சட்டத் திட்டங்களை உடைத்தெறிந்துவிடுகிறான்.
71. இந்த மனுஷரோ, அவர்கள் ஒரே மெய்யான தேவன் பேரில் காத்திருந்தனர். அவர்கள் அவரை ஒரு புனிதமான அக்கினியின் வெளிச்சத்தில் ஆராதிக்கின்றனர். அவர்கள் இந்த அக்கினியைச் சுற்றி உண்டாக்கிவிட்டு, ஆண்டவர் பேரில் காத்திருப்பார்கள். அவர்களில் அநேகர் இன்றைக்கு நாம் வைத்துள்ளதுபோல வான ஆராய்ச்சிக் கூடங்களை வைத்திருந்தனர். எனவே அவர்கள் மலைகளில் உயரமான இடத்தில் இருந்த அந்த ஸ்தலங்களுக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் அங்கிருந்து நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பார்கள். அவர்கள், “தேவன் பூமியின் மேல் எந்தக்காரியத்தையாவது செய்வதற்கு முன்னர், அவர் அதை முதலில் வானத்தில் காண்பிக்கிறார்" என்று வலியுறுத்திக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது சரியே.
72. தேவன் எப்பொழுதுமே முதலில் அதை வானத்துக்குரிய அடையாளங்களின் மூலமே காண்பிக்கிறார். அவர் எப்போதும் எந்தக் காரியத்தையுமே செய்யத் தொடங்கினபோது, அதை முதலில் வானத்திற்குரிய ஓர் அடையாளத்தினால் காண்பிக்காமல் செய்ததுண்டா? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், ஒவ்வொரு காலத்திலுமே அதை நீங்கள் அறிய விரும்பினால், தேவன் பூமியின் மேல் எந்தக் காரியத்தையும் செய்யும் முன்னர், அவர் அதை முதலில் எப்பொழுதுமே வானத்திலே அடையாளங்களாகக் காண்பிக்கிறார். ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் இயற்கைக்கு மேம்பட்டதிலிருந்து வந்து இயற்கையானதற்குள்ளாக விழுந்து
73. ஆகையால் இந்த நேரமும் வித்தியாசமானதாய் இருக்கவில்லை. எனவே அந்த வான சாஸ்திரிகள் காணக் கூடியதாயிருந்த அந்த வானொளிக் கோளங்களை, நட்சத்திரங்களை, சந்திரனை மற்றும் அவர்களுடையக் கண்களினால் காணக்கூடிய ஒவ்வொரு காரியத்தையும் கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொன்றின் நிலையையும், ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே உறுதியாக நிலைத்திருக்கும் என்பதையும் அறிந்திருந்தனர். நாம் வேதவாக்கியங்களை அறிந்திருப்பதுபோல அவர்கள் வானசாஸ்திர நாள் காட்டியை நன்கு அறிந்திருந்தனர். ஒரு சிறு காரியம் அதனுடைய ஸ்தானத்திலிருந்து நிலைமாறினாலும் அவர்கள் அதை அறிந்திருந்தனர், ஏனென்றால் அது ஓர் அடையாளமாய் இருக்கிறது. எனவே அவர்கள் அந்த அடையாளங்களை மிகவும் கவனமாக இரவின் ஒவ்வொரு மணி நேரத்திலும் கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அதையே கவனித்திருந்தனர். அப்பொழுது விசித்திரமான ஒன்று ஆகாயத்தில் தோன்றி அவர்கள் எல்லோரையுமே தொல்லைப்படுத்தப் போவதாயிருந்தது என்பதில் வியப்பொன்றுமில்லையே! எனவே அந்த வருகையாளர் அவர்களை சற்று அசைத்ததில் வியப்பொன்றுமில்லையே! காரணமென்ன வெனில் அவர்கள் அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் அறிந்திருந்தனர். மேலும் அவர்கள் விஞ்ஞானப்பூர்வமாக அவைகள் ஒவ்வொன்றினுடைய அசைவையும் ஆய்ந்து அறிந்திருந்தனர்.
74. எனவே அவர்கள் எப்பொழுதும் இந்த அக்கினியைச் சுற்றி ஒன்று கூடுவர். அவர்கள் அந்த நெருப்பைப் புனிதமான எண்ணெயின் மூலம் பற்ற வைத்து, அதை எரிய வைப்பர். அங்கிருந்து அவர்கள் கவனித்துப் பார்ப்பார்கள், ஏனென்றால், “தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருந்தார்” என்று அவர்கள் விசுவாசித்தனர். அவர் பட்சிக்கிற அக்கினியாகவே இருக்கிறார்.
75. நீங்கள் பாருங்கள், அப்போஸ்தலருடைய நடபடிகள் 10-ம் அதிகாரத்தில் 35-வது வசனத்தில், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்" என்றும் வேதவசனம் கூறுகிறது. அது நீங்கள் மெத்தோடிஸ்டுகளாய், பாப்டிஸ்டுகளாய், பிரஸ்பிடேரியன், லூத்தரன் அல்லது கத்தோலிக்கர் அல்லது நீங்கள் யாராய் வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் உங்களுடைய இருதயத்தில் உத்தமமாயிருந்தால், தேவன் உங்களை அவருடைய இரக்கத்தின் தெய்வீக வெளிச்சத்திற்குள்ளாகக் கொண்டுவர உங்களுக்கு ஒரு தருணத்தை அளிப்பார். அவர் தேவனாயிருக்கிறார். அவர் தம்முடைய வாக்குத்தத்தின் மூலமாய் கடமைப்பட்டிருக்கிறார். அதன்பின்னரோ நீங்கள் அதை ஏற்றுக் கொண்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்ததாயுள்ளது. அதன்பின்னர் உங்களால் நியாயத்தீர்ப்பில் நிற்க முடியும். ஆனால் அதுவரைக்கும் நீங்கள் பொறுப்புள்ளவர்கள் அல்ல, எனவே நீங்கள் அறிந்துள்ள எல்லாவற்றிலும் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறிர்கள்.
76. ஆகையால் இந்த வான சாஸ்திரிகள் இந்தப் புனிதமான ஆலயத்தின் அக்கினியை ஆராதித்து, அது எரியும்போது, அதனுடைய புனிதமான அக்கினி ஜீவாலைகளை உற்று நோக்கி, அது பட்சிக்கும் அக்கினியாயிருந்த தேவனின் ஆவியின் ஏவுதலாயிருக்குமா என்று வியப்புற்று, அதன் பின்னர் மேலே ஏறிச் செல்வர். அவருடையப் பிரசன்னத்தில் பூமி அழிந்துபோகும். அவன் அதற்குள்ளாக நோக்கிப் பார்க்கும்போது, அப்பொழுதே அவன் தன்னுடைய ஆவியின் ஏவுதலைப் பெற்றுக்கொள்வான். அதன்பின்னர் அவன் அந்தக் கோபுரத்திற்குள்ளாக மேலே ஏறிச்சென்று எந்த நட்சத்திரமாவது நகர்ந்துள்ளதா என்று பார்க்கும்படிக்கு சுற்றும் முற்றும் நோக்கிப் பார்ப்பான். அவ்வாறு அவர்கள் இதை வருடா வருடம், நாளுக்கு நாள், மணிக்கு மணி, ஆயிராமாயிரும் ஆண்டுகாலமாக செய்து வந்தனர். அவர்கள் நட்சத்திரங்களை, கோளங்களை கவனித்து வந்தனர். அப்பொழுது அவர்கள் தோல் சுருள்களைக் கொண்டு வந்து, அவைகளை வாசித்துப் பார்ப்பார்கள்.
77. அதுவோ இதன் பேரிலான குறிப்பிட்ட இரவாய் இருந்திருக்க வேண்டும். அதாவது அவர்கள் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் குறித்தும், இராஜ்ஜியங்கள் பலவீனமடைந்து வீழ்ச்சியுறுவதையுங் குறித்தும், எப்படியாய் உலகமானது அந்த ஸ்தலங்களில் உயர்ந்திருந்தும் மீண்டும் இடிந்த விழுந்துபோயின என்பதைக் குறித்தும் ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே ஒரு தோல் சுருள் கொண்டு வரப்பட்டிருந்தது. அது தானியேலின் புத்தகமாய் இருந்திருக்க வேண்டும். அவர்களோ அங்கே ஏதோ ஒரு காரியத்தை, அதாவது தானியேல், "ஒரு கல் கைகளால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வரும்” என்று கூறியிருந்ததை ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
78. அப்பொழுது அவர்கள் இதன் பேரில் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அந்தப் புனித அக்கினி எரிந்து கொண்டிருக்கையில், இது தோன்றியிருக்க வேண்டும். அதாவது அப்பொழுது அந்த நட்சத்திரங்களுக்கு மத்தியில் விசித்திரமான ஒன்று இருந்ததை அவர்கள் கவனிக்க நேர்ந்தது, அது அவர்கள் எண்ணிப்பார்க்க முடியாததாயிருந்த ஒரு காரியமாயிருந்தது. அதைக் குறித்து அவர்களுடைய தோல் சுருள்கள் ஒன்றுமே கூறியிருக்கவில்லை. அவர்களுடைய எழுத்து ஆவணங்களும் அதைக் குறித்து ஒன்றுமே கூறியிருக்கவில்லை, ஆனால் அங்கே அது இருந்ததே! எனவே அவர்களால் அதை மறுதலிக்க முடியாமற்போயிற்று. அவர்கள் வானொளிக் கோளங்களைக் கவனித்து வந்தனர். எனவே அவர்கள் இயற்கைக்கு மேம்பட்ட ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொண்டனர்.
79. ஓ, அவர் மிகவும் நல்லவராயிருக்கிறாரே! அவர் ஜீவனுக்கென்று நியமித்திருக்கிற ஒவ்வொரு நபரின் கவனத்தையும் தெரிந்து கொள்வார், அவர்களோ தங்களுடைய சொந்த வழிகளில் ஆராதித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் தேவனாயிருக்கிறார், அவர் மானிடரின் இருதயங்களை அறிந்திருக்கிறார். அவர் அவர்களை ஒரு ஸ்தலத்திற்கு கொண்டு வருகிறாரே! “ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடும்போது," அந்த அழைப்பிற்கு பதிலளிக்க ஓர் ஆழம் இருக்கதான் வேண்டும். ஒரு மனிதன் ஏதோ ஒன்றிற்காகத் தாகமாயிருந்துகொண்டிருந்ததால், அந்தத் தாகத்தைத் தணிக்க, அங்கே அதற்குப் பதிலளிக்க ஏதோ ஒன்று உள்ளது என்பதையே அது காண்பிக்கிறது.
80. நான் அடிக்கடி கூறியிருப்பதுபோன்றே, மீனுடைய முதுகில் ஒரு துடுப்பு இருப்பதற்கு முன்பே, அது நீந்துவதற்கு முதலில் தண்ணீ ர் இருந்தது, இல்லையென்றால் அதற்கு நீந்த ஒரு துடுப்பே இருந்திருக்காது. பூமியிலே ஒரு மரம் வளருவதற்கு முன்பே, பூமியானது முதலில் இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் மரமே இருந்திருக்காது.
81. சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் அதை ஆராய்ந்து படித்துக்கொண்டிருக்கையில், செய்தித்தாளில் ஒரு துண்டில் நான் அதைக் கவனித்தேன். அதாவது அதில் ஒரு சிறு பையன் பள்ளிக்கூடத்தில் பென்சில்களின் ரப்பர் அழிப்பான்களை (Erasers) சாப்பிடுகிறான் என்றிருந்தது. அப்பொழுது ஒருநாள் அவன் தன்னுடைய இருசக்கர மிதிவண்டியினுடைய ரப்பராலான கால் மிதியடியை பின்னால் உள்ள தாழ்வாரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அவனுடையத் தாயர் கண்டறிந்தாள். அப்பொழுது அவளோ இந்தச் சிறு பையனோடு உள்ள காரியம்தான் என்ன என்றே வியப்புற்றுப் போனாள். எனவே அவள் அவனைப் பரிசோதனைக்காக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றாள். அவளுடைய சிறு பையனை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், மருத்துவரோ அவனுக்கு கந்தகம் தேவைப்பட்டதைக் கண்டறிந்தார். கந்தகமோ ரப்பரில் உள்ளது. ஆகையால் அவனுடைய சரீர அமைப்பில் கந்தகத்திற்கான ஏக்க உணர்வு உண்டாயிருப்பதற்கு முன்னமே, அந்த ஏக்க உணர்விற்குப் பதிலளிக்க ஒரு கந்தகம் இருக்க வேண்டியதாயிருந்தது இல்லையென்றால் அவனுக்கு அந்த ஏக்க உணர்வே ஒருபோதும் இருந்திருக்காது.
82. சிருஷ்டிப்பு என்ற ஒன்று இருப்பதற்கு முன்பு, அந்தச் சிருஷ்டிப்பை உண்டாக்க ஒரு சிருஷ்டிகர் இருக்க வேண்டும்.
83. இன்றைக்கு இங்கு உள்ள புருஷனோ அல்லது ஸ்திரீயோ, பையனோ அல்லது பெண்ணோ ஜீவனை வாஞ்சிக்காமல் இருந்தால் என்னவாகும்? இன்றைக்கு என்றென்றுமாய் ஜீவிக்கும்படி ஜீவனை விரும்பாமலிருக்கும் மானிடனை எனக்குக் கூறுங்கள். அப்பொழுது ஒரு பித்து பிடித்த நபரே அதை வாஞ்சிக்காமலிருக்கிறான் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன், ஏனென்றால் ஜீவனைப் பார்க்கிலும் மகத்தானது ஒன்றுமேயில்லையே.
84. நீங்கள் உலகத்தையும், அதனுடைய எல்லாப் பொருட்களையும் சொந்தமாகக் கொண்டிருந்தால், அப்பொழுது நீங்கள் இன்றைக்கு என்னக் கொடுப்பீர்கள்? நீங்கள் என்றென்றுமாய் ஜீவிக்க அதனைப் பெருமையோடு அளித்துவிட்டு ஒரு பரம ஏழையாகவே இருப்பீர்கள். ஜீவனாயிற்றே! வயோதிக ஜனங்களாகிய உங்களில் எத்தனைபேர் நீங்கள் மீண்டும் வாலிப மனிதனாக அல்லது வாலிப ஸ்திரீயாக மாற உங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையுங் கொடுப்பீர்கள்? [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறைகள் தட்டுகிறார் - ஆசி.] ஒவ்வொரு மனிதனும் அதற்காகவே தேடுகிறான். ஏன்? அது எங்கோ உள்ளது இல்லையென்றால் நீங்கள் அதற்காக ஒருபோதும் ஏங்கவே மாட்டீர்கள்.
நீங்கள் சுகவீனமாயிருந்தால், சுகவீனமான ஜனங்களாகிய நீங்கள் இன்றைக்கு இங்கே ஏன் இருக்கிறீர்கள்? நீங்கள் எதற்காகத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்? ஜெபத்திற்காக உங்களை வரும்படிச் செய்கிறது எது? காரணம் உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று உள்ளதே! நீங்கள் எந்தச் சபையைச் சார்ந்திருந்தாலும், நீங்கள் என்ன பெயரிடப்பட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. நீங்கள் ஒரு மானிட வர்க்கமாயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய ஒரு சிருஷ்டிப்பாயிருக்கிறீர்கள். உங்களுக்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று உங்களை எங்கோ இழுக்கிறதாயுள்ளது. உங்களுடைய இருதயத்தில் ஓர் இழுப்பு நிச்சயமாக இருக்கின்றவரையில், மருத்துவர் ஒருக்கால் உங்களைக் கைவிட்டப் பிறகும் இன்னமும் நம்பிக்கை உண்டாகும். தேவனுடைய சுகமளிக்கும் வல்லமையான அவருடைய ஐஸ்வரியமான ஓர் ஊற்று எங்கோ திறந்திருக்கத்தான் வேண்டும், இல்லையென்றால் உங்களுக்கு அதற்கான ஏக்கமே ஒருபோதும் இருக்காது. எனவே அது எங்கோ இருந்தாகத்தான் வேண்டுமே!
85. நீங்கள் அந்த இயேசுவைக் காண வாஞ்சித்தால், யேகோவாவைக் காணும்படியாக ஏதோ ஒன்று உங்களை வாஞ்சை கொள்ளச் செய்யுமேயானால், அப்பொழுது அவர் எங்கோ இருக்கிறார் இல்லையென்றால் நீங்கள் அதனை ஒருபோதும் வாஞ்சிக்கவே மாட்டீர்கள். தேவன் வான சாஸ்திரிகளுக்கு அல்லது எவருக்குமே நல்லவராக இருப்பதுபோல உங்களுக்கும் அவ்வளவு நல்லவராகவே இருக்கிறார். நீங்கள் அவருக்காக வாஞ்சித்தால், “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் பருகித் திருப்தியான பங்கினையடையும்படிக்கு அந்த ஊற்றண்டைக்குக் கொண்டு வரப்படுவார்கள்”.
86. ஜனங்கள் இங்கே ஒருகால் மரிக்கலாம். நீங்கள் மரிக்க வேண்டியதில்லை, உங்களுக்காக ஏதோ ஒன்று விடப்பட்டிருப்பதை நீங்கள் உணருகிறீர்கள். அந்தக் காரணத்தினால்தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் நரம்புத் தளர்வுற்று உங்கள் சிந்தையை சரிசெய்து ஒருமுகப்படுத்த முடியாமலிருக்கலாம், ஆனால் உங்களுக்குள் இருக்கிற ஏதோ ஒன்று, “என்னை மீண்டும் சீர்படுத்தி சரியான நிலைக்கு கொண்டுவரக் கூடிய ஏதோ ஒன்று உண்டு” என்று உங்களிடத்தில் கூறிக்கொண்டிருக்கிறது. அவமானத்தோடு வீதியில் நடந்துகொண்டுள்ள விபச்சாரிகளாயிருக்கலாம்; தங்களுடையக் கணவன்மார்களுக்கு அநீதியாய் வாழ்ந்துள்ள பெண்களாயிருக்கலாம்; தங்களுடைய விவாக உறுதிமொழியை முறித்துப்போட்டிருக்கலாம்; குடிப்பழக்கத்தில் மூழ்கி பாவப்பட்டியலில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் செய்துள்ள மனுஷராயிருக்கலாம்; ஆனாலும் எங்கோ ஓர் ஊற்று உண்டு என்று ஏதோ ஒன்று உங்களிடம் சொல்லுகிறது.
87. நீங்கள் கத்தோலிக்கராயிருக்கலாம், நீங்கள் யூதராயிருக்கலாம், நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நீங்கள் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்ட ஒரு மானிடனாய் இருக்கிறீர்கள். எனவே அவர் உங்களை இழுத்துக் கொண்டும், உங்களை அழைத்துக் கொண்டுமிருக்கிறார். அந்த வான சாஸ்திரிகள் வழிநடத்தப்பட்டது போலவே நீங்கள் வழி நடத்தப்படுகின்றீர்கள்.
88. அவர்கள் ஆராய்ந்து பார்த்து விட்டு அப்பால் நோக்கிப்பார்த்து, அந்த வெளிச்சத்தைக் கண்டபோது, அது என்னவாயிருந்தது என்பதை அவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போமாக, அவர்கள்........ அதற்கு அடுத்த நாள் உறங்கச் சென்று கீழே படுத்துக்கொண்டனர். அப்பொழுது அவர்கள் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு, அதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாகிய பில்தாது என்பவன் ஒரு சொப்பனம் கண்டிருக்க வேண்டும். அவன் ஒரு சொப்பனம் கண்டிருந்தான் என்றே நாம் கூறலாம். அவன், "ஒரு நாட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும். எங்கோ இராஜாவாக யூதர்களுக்கு மத்தியிலே ஒரு குழந்தை பிறக்க வேண்டியதாயுள்ளது. நீங்கள் காண்கிற அந்த ஒளியே இப்பொழுது உங்களை உலகத்தில் வந்து ஒளியைத் தேடுகிற எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற அந்தப் பரிபூரண ஒளியண்டை உங்களைக் கொண்டுச் செல்லும்" என்று தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டிருந்தது என்பதைக் குறித்து சொப்பனங்கண்டான்.
89. பாருங்கள், எந்த மார்க்கமாயிருந்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர்கள் உண்மையாகவே தேவனுக்கு பயந்திருந்தால், அப்பொழுது தேவன் அவர்களை இந்த ஒளியண்டைக்குக் கொண்டுவர கடமைப்பட்டிருக்கிறார். அவர் அவர்களை அவர்களுடைய சொந்த வழியிலேயேக் கொண்டு வருகிறார்.
90. சில சமயத்தில் அவர் அவர்களைத் துன்பங்களின் மூலமாகக் கொண்டு வருகிறார். சில நேரத்தில் அவர் அவர்களை....... கொண்டு வருகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள், இந்தக் கடைசி நாட்களில் அவர்கள் துன்பங்களின் மூலமாக வருவார்கள் என்று அவர் தீர்க்கதரிசனமாயுரைத்துள்ளார். அவர் கலியாண விருந்தினை ஆயத்தம் செய்தார். அப்பொழுதோ எவருமே - யாருமே வரவில்லை. எனவே அப்பொழுது அவர், “நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய் போய், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும், துன்பப்படுவோரையும் என்னுடைய மேஜைகள் நிரம்பும்படியாகக் கூட்டிக் கொண்டுவருவார்கள்” என்றார்.
91. இந்தக் கடைசி நாளில் அவர் ஆவியில் அசைவாடி அவர்களை ஒன்றுசேர்த்துக் கொண்டு வரும்படிக்கு அவர்களை ஒவ்வொரு வாழ்க்கை முறையிலிருந்தும், வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தேடிக்கொண்டிருக்கிறார். எல்லா ஸ்தாபனங்களும், ஜீவனுக்காக வாஞ்சிக்கிற யாவருக்குமே அவருடைய மகிமையின் சரீரத்தினுடைய அவருடையப் பிரசன்னத்தில் நடக்கவும், அதை ஏற்றுக்கொள்ளவும் ஓர் உரிமை உண்டு; ஏனென்றால் அவர் ஜீவனுள்ள தேவனுடையக் குமாரனாய் இருக்கிறார், அவர் எப்பொழுதும் பிரகாசித்ததுபோன்றே இப்பொழுதும் நம் மத்தியில் இன்னமும் விடிவெள்ளி நட்சத்திரமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.
92. அதே ஒளியே பவுலை தமஸ்குவிற்கு செல்லும் அவனுடைய வழியிலே இருக்கையில் அவனை அடித்து வீழ்த்தியது. அவன் தன்னுடைய இருதயத்தில் உத்தமமாயிருந்து அதிகமாய் சத்தமிட்டுக் கொண்டும், ஆரவாரமிட்டுக்கொண்டும், மிக அதிக இரைச்சலை உண்டாக்கிக் கொண்டிருந்த ஒரு கூட்ட ஜனங்களைத் துன்புறுத்த முயற்சித்தான். அவன் அவர்களை அடித்து வீழ்த்தவே புறப்பட்டுச் சென்றான். மேலும் அவன் செய்துகொண்டிருந்தது சரியென்றே அவன் எண்ணியிருந்தான். அப்பொழுது அவனுடைய வழியில் அங்கே அக்கினி ஸ்தம்பமானது நின்று அவனைத் தரையிலே விழத்தள்ளிற்று. பின்னர், “சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று கூக்குரலிட்டார்.
அதற்கு அவனோ, “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அப்பொழுது அவன் வைராக்கியங்கொண்டிருந்த யேகோவாவோ, “நான்தான் இயேசு” என்றார்.
93. அவன் யேகோவாவைக் குறித்து வைராக்கியமாயிருந்தான். ஆனால் இயேசுவைக் குறித்தோ ஒன்றுமே அறியாமல், “அவர் ஒரு - ஒரு குற்றவாளியாயிருந்தார்” என்று மட்டுமே அறிந்திருந்தான். ஆனால் தேவன் அவனை அனுப்பினார். உலகம் எப்போதும் கண்டிருந்ததிலேயே மகத்தான மிஷினெரியாக அவன் மாறினான். ஏன்? அவன் உத்தமமாயிருந்தான்; அவன் விசுவாசித்தான். எனவே தேவன் அவனை ஒளியினால் வழிநடத்தினார்.
94. இன்றைக்கு அவருடையப் புகைப்படத்தையுங்கூட காணும் படியான கிறிஸ்தவர்களாக நம்மை உணர்வுள்ளவர்களாக்கியுள்ளதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நானோ இப்பொழுது நூறு சதவீதம் முதன்மையான அந்த ஒன்றையே உடையவனாயிருக்கிறேன். ஆனால் நம்முடையப் பாவங்களிலிருந்து கழுவப்பட, அவருடைய குமாரனின் நீதியில் சுத்தமாக்கப்பட, கர்த்தராகிய இயேசுவின் குமாரரும், குமாரத்திகளுமாக, நம்மை மாற்றுகிறத் தேவனுடைய ஆவியினால் புதிதாய் பிறக்கும்படி அந்த யேகோவா தேவன் அவருடைய குமாரனின் இரண்டாம் வருகைக்கு முன்னர் நம்மை வழிநடத்த, நம்மைத் தேற்ற, அந்த ஊற்றண்டைக்கு நம்மைக் கொண்டுவரும்படிக்கு அவருடைய ஒளியை அனுப்பியிருக்கிறார்.
95. நாம் நம்முடைய சிந்தையிலிருந்து மாற்றப்பட்டிருப்பதே, நம்முடைய மனப்பான்மையிலிருந்து மாற்றப்பட்டிருப்பதே, உட்புறத்தில் சம்பவித்த ஏதோ ஒரு காரியத்தினால் மாற்றப்பட்டிருப்பதே பிறப்பு என்று பொருள்படுகிறது. இந்த உலகத்தில் உங்களை மாற்றக் கூடிய மார்க்கம் ஒன்றுமே இல்லை, உங்களை மாற்றப் போதுமானத் தண்ணீரும் இல்லை, உங்களை மாற்றப் போதுமான சடங்கு முறைகளோ அல்லது பிரசங்கங்களோ கிடையாது. தேவனுடையக் குமாரனாகிய இயேசுவின் இரத்தமே அதைச் செய்கிறது. சிவிங்கி தன் புள்ளிகளை நக்கி தன்னைவிட்டு மாற்றிக்கொள்ள முடியாததுபோல, நீங்கள் சபையில் சேர்ந்துகொள்வதன் மூலம் உங்களை ஒருபோதும் சுத்தமாக்கிக்கொள்ள முடியாது. அது அதிகமாக நக்குவதனால் அந்தப் புள்ளிகள் இன்னமும் பளிச்சென்று காணப்படும். அது அவைகளை வெளிக்காட்ட மாத்திரமே செய்கிறது. எனவே சபைகளில் சேர்ந்துகொள்வதனால், உங்களுடைய சொந்தத் தகுதிகளின் பேரில் செயல்பட முயற்சித்தல் - போன்றவைகளினால் நீங்கள் உங்களுடையக் குறைவையே, உட்புறத்தில் உள்ள பசியையே, இன்னும் நிரப்பப்படாமலிருக்கிற ஏதோக் காரியத்தையே காண்பிக்கிறீர்கள். முயற்சி செய்வதை விட்டுவிடுங்கள்; அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்களை அந்த ஒளியண்டை நடத்திச் செல்வார்.
96. இந்த ஜனங்கள் இந்தக் குழந்தையைத் தொழுதுகொள்ள வேண்டும் என்று இந்தச் சொப்பனத்தினால் அவர்கள் போக வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஐஸ்வரியமுள்ள மனுஷராயிருந்தனர். எனவே அவர்கள் சேகரித்தத் தங்களுடைய ஐஸ்வரியங்களான தூபவர்க்கம், பொன், வெள்ளைப்போளம் போன்றவைகளை பொக்கிஷங்களாக எடுத்துக்கொண்டனர். பின்னர் மூவரும் ஒரு சாட்சியாகப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தங்களுடைய ஒட்டகங்களின்மேல் சேணங்கட்டி, அவைகளை எடுத்துக்கொண்டு, அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். எனவே அவர்கள் அந்த மலையின் மீது ஏறி கடந்து கீழே வந்து டைகீரிஸ் ஆற்றையும் துறையண்டைக் கடந்து சிநேயார் பள்ளத்தாக்கிற்குள் சென்றிருந்திருக்க வேண்டும். நட்சத்திரமோ அவர்களை எருசலேமுக்கு வழி நடத்திக்கொண்டிருந்தது.
97. எருசலேமோ எப்பொழுதுமே உலகத்தின் மார்க்கரீதியான அரியணையாகவே இருந்து வருகிறது, ஏனென்றால் மகத்தான இராஜா அங்கே ஜீவித்திருந்தார். அது அந்த அதே நகரத்தில், அங்குதான் ஆபிரகாம் இராஜாக்களை முறியடித்து வருகையில் ஒரு இராஜாவை சந்தித்த இடமாய் இருந்தது, அவருடையப் பெயர் மெல்கிசேதேக்கு என்பதாய் இருந்தது. அவருக்குத் தகப்பனும் கிடையாது, தாயும் கிடையாது; நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமில்லாதவராய் இருக்கிறார். கோத்திரப்பிதா ஆபிரகாம் முதலாய் இவருக்குப் பத்தில் ஒன்றை, தசமபாகத்தைச் செலுத்தினான். "தகப்பனும் இல்லை, தாயும் இல்லை; அவருக்கு காலத்தின் துவக்கமும் இல்லை, அவருக்கு முடிவின் நேரமும் இல்லை.'' அந்த மகத்தான இராஜா சாலேமிற்கு வந்தார், அது எருசலேமாயிருந்தது.
98. அந்த நட்சத்திரமோ இந்த வான சாஸ்திரிகளை இந்த உலகத்தின் மார்கரீதியான அரியணைக்கு வழிநடத்திச் சென்றது, ஆனாலும் வருத்தமாயிருந்த காரியமென்னவென்றால், அவர்கள் அங்கு சென்றடைந்தபோது, அதைக் குறித்து அங்கிருந்த அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதிருந்தது. எனவே இந்த வான சாஸ்திரிகள் வீதிகளில் மேலும் கீழுமாக விரைந்து சென்றனர். நட்சத்திரமோ, அவர்கள் பெத்லகேமை சென்றடைந்தவுடன்....... அவர்கள் எருசலேமை சென்றடைந்தவுடனே, நட்சத்திரம் மறைந்துவிட்டது, எனவே அது அதற்கு மேல் அவர்களை வழிநடத்தவில்லை. தேவன் என்ன செய்துகொண்டிருந்தார்? எப்படி அதை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியும்..... என்பதைக் காண்பிக்க.....
99. தேவனுடைய மகத்தான வெளிச்சம் பிரகாசிக்கத் துவங்கியிருக்கும்போது, இன்றைக்கும் இன்னமும் நம்முடைய வேத சாஸ்திரங்கள் எல்லாவற்றையுங்கொண்டுள்ள நம்முடையப் பெரிய சபைகளில் அதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கின்றனர். வாடிகன் நகரத்திற்கு இந்தக் காரியங்களைக் குறித்து என்னத் தெரியும்? சபை ஸ்தாபனங்களுக்கு என்னத் தெரியும்? ஒன்றுமே தெரியாதே! நாமோ மற்றொரு கிறிஸ்துமஸில் இருக்கிறோம்.
100. அவர்கள் ஏதோ ஒரு காரியத்தைக் கண்டிருந்தனர் என்றே இந்த மனிதர்கள் அறிந்திருந்தனர். அங்கே ஏதோ ஒரு காரியம் சம்பவித்திருந்தது என்றே அவர்கள் அறிந்திருந்தனர். ஏனென்றால் அவர்கள் வானொளிக் கோளங்களை ஆராய்ந்து பார்த்திருந்தனர். இதோ ஒரு புதியதாய் தோன்றின ஒன்று இருந்ததே. அவர்கள் அதன் மூலமாகவே விசித்திரமாக வழிநடத்தப்பட்டிருந்தனர். ஆனால் இப்பொழுது நகரத்திலோ அவர்கள் ஒவ்வொரு சிறு வீதிகளிலும் மேலும் கீழுமாகச் சென்று, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டோம்” என்று கூச்சலிட்டனர்.
101. இப்பொழுது அவர்கள் கிழக்கில் இருந்தனர். அவர்கள் அவருடைய நட்சத்திரத்தை மேற்கில் கண்டனர். ஆனால், “நாங்கள் கிழக்கில் இருந்தபோது'' என்றனர். நூற்றுக்கனக்கான மைல்கள், பாருங்கள், எனவே அவர்களுக்கு அந்தப் பயணத்தை மேற்கொள்ள இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.
102. உங்களுடைய சில உபதேசங்களின் அடிப்படை ஆதாரங்களை நான் அறிவேன், ஆனால் இதுவோ சத்தியமாயிருக்கிறது. அவர்கள் அந்தப் பயணத்தை மேற்கொள்ள இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் இவர்கள் தங்களுடைய முன்னனையில் சிறு குழந்தையை வைத்திருக்க, அதனண்டை வான சாஸ்திரிகள் வருவதைப் போன்று கூறப்படுகின்ற விதமாக அவர்கள் ஒருபோதும் வரவில்லை. அது கிறிஸ்தவனின் அர்த்தமற்ற காரியமாயுள்ளது. அவர்கள் ஒருபோதும் ஒரு முன்னனையில் இருந்த எந்தக் குழந்தையிடமும் ஒருபோதும் வரவில்லை. அவர்கள் அவ்வாறு வந்தனர் என்று கூறுகிற எந்த வேதவாக்கியமும் கிடையாது. அவர்கள் இரண்டு வயது கொண்ட ஒரு பிள்ளையினிடத்திற்கே வந்தார்கள். அப்பொழுது அவர் எந்த முன்னனையிலுமே இருக்கவில்லை. அவரோ ஒரு வீட்டில் இருந்தார். அதனுடைய ஏனைய வேதவாக்கியங்களை வாசித்துப் பாருங்கள். ஆனால் கிறிஸ்தவ பாரம்பரியங்கள் ஓ, அவர்கள் தங்கள் போதனைகளினால் முழு உலகத்தையும் குழப்பமடையச் செய்துவிட்டனர்.
103. அப்பொழுது அவர் ஒரு சிறு குழந்தையாயிருந்திருந்தால், ஏரோது ஏன் இரண்டு வயது கொண்ட பிள்ளைகளைக் கொன்றான்? வேதவாக்கியமோ அவர்கள் ஒரு “பிள்ளையினிடத்திற்கே”, ஒரு குழந்தையினிடத்திற்கு அல்ல, இரண்டு வயதுடைய ஒரு “பிள்ளையண்டைக்கே” வந்தனர் என்று கூறியுள்ளது. ஏரோது அவரைக் கொல்ல முயற்சிக்கவே, இரண்டு வயதுகொண்ட பிள்ளைகளைக் கொல்லப் புறப்படான்; குழந்தையாயிருந்தவர்களை, இரண்டு வயது நிரம்பாதக் குழந்தைகளை அவன் கொன்றிருந்திருக்கமாட்டான்.
104. அவரை ஒரு முன்னனையில் ஒரு போதும் கண்டடையவில்லை; அவர்கள் அவரை ஒரு வீட்டில் கண்டனர். “அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டனர்”. ஆனால் எப்படி அவர்கள் அதை திரித்துவிட்டார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.
105. அதில் வியப்பொன்றுமில்லையே! சில இரவுகளுக்கு முன்னர், இயேசு அந்தப் பரிசேயர்களிடத்தில், "நீங்கள் உங்களுடைய பாரம்பரியங்களைக் கைக்கொண்டு, தேவனுடையக் கட்டளைகளை வியர்த்தமாக்கிவிட்டீர்கள்” என்று கூறினதை நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன்.
106. அப்பொழுது அவர்கள், " தேவன் எங்கே?” என்று கூக்குரலிட்டனர். நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காமலிருக்கும்போது, எப்படி உங்களால் அவரை விசுவாசிக்க முடியும்? எனவே, "அந்த வேதாகமத்தின் தேவன் எங்கே?” என்று கூறுங்கள். அவர் இருக்கிற வழியிலேயே அவரண்டை திரும்பிச் செல்லுங்கள், அப்பொழுது "அந்த ஒரே வழியில் மாத்திரமே நீங்கள் எப்போதும் அவரை அறிந்துகொள்வீர்கள். இதோ அந்த வழி உள்ளது.
107. அவர்கள் வீதிகளில் மேலும் கீழுமாகச் சென்று, "அவர் எங்கே? யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்” என்று கூக்குரலிட்டனர்.
108. ஓ, ஆசாரியர்களில் சிலர், “ஐயன்மீர், நீங்கள் எங்கோ உள்ள ஒரு கூட்ட மதவெறியர்களுக்கு செவிகொடுத்திருக்க வேண்டும். நீங்கள் யாரோ ஒருவருடைய குறுகிய மனப்பான்மைக்கொண்ட வேத சாஸ்திர போதனைக்கு செவிகொடுத்துக்கொண்டிருக்க வேண்டும்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது.
109. அப்பொழுது அந்த மனிதர்களோ, “இல்லையே ஐயா! நாங்கள் அதை செயல்முறையில் கண்டோம். அது உண்மை என்பதை நாங்கள் அறிவோம். அதுவே எங்களை இம்மட்டும் வழிநடத்தினது. ஆனால் எங்களால் அதை இதற்குமேல் கண்டறிய முடியவில்லை, இது இராஜாவினுடைய நகரமாயுள்ளதே” என்று கூற முடிந்திருக்கும்.
110. அது விசித்திரமாயிருக்கவில்லையா? உலகத்தில் உள்ள மிகப்பெரிய சபையில், அதிகமான ஜனங்கள் இருக்க, அதேசமயத்தில் அவர்களோ அதைக் குறித்து ஒன்றையுமே அறிந்திருக்கவில்லை. இந்த கிறிஸ்துமஸிலும் பூமியின்மேல் உள்ள ஜனங்களின் நிலைமை அதேவிதமாயிருக்கிறதல்லவா? அதே நிலைமையாயிருக்கிறதே! எவரிடத்திலுமே பதில் இல்லாதிருந்தது. அவர்களால் பதிலைக் கண்டறிய முடியவில்லை .
111. முடிவிலே அது மிக மோசமானதே! இவர்கள் ஐஸ்வரியமுள்ள மனிதர்களாயிருந்தனர். அவர்களுடைய ஒட்டகங்களுக்குப் போர்த்தப்பட்டிருந்த நேர்த்தியான ஆடையின் விதத்தை உங்களால் கூற முடியும். அவர்கள் எந்த ஒரு வீதியையுமே விட்டு வைக்கவில்லை; அவர்கள் ஒவ்வொரு சந்திலும் நுழைந்து, "அவர் எங்கே? அவர் எங்கே?" என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றனர்.
112. இன்றைக்கு அணு குண்டுகளோ அப்பால் உள்ள கொக்கிகளில் தொங்கிக்கொண்டிருக்க, உலகமானது இன்றைக்கு முழு அழிவின் விளிம்பில் இருக்கும்போது, இந்தத் தலைமுறை மக்களோ ஒரு வினாடியில் அழிக்கப்படவிருக்கின்றனர்; ஓர் அழிவின் தகர்வுறுதலினால் எந்த சிறிய தேசமும் பூமியை புதையுண்டு மறையச் செய்ய முடியும்.
113. அன்றொரு நாள் நடைபெற்ற விஞ்ஞானிகளின் கூட்டத்தில், ஓர் இருள் சூழ்ந்திருந்ததாக அவர்கள் கூறினர். ஏன், இப்பொழுது அவர்கள் வைத்துள்ள அணுகுண்டோ ஒரு கைத்துப்பாக்கியின் மேற்பகுதியளவாய் மட்டுமே உள்ளது. மற்ற தேசங்களும் அதை வைத்துள்ளன. பென்டகன் தாங்கள் வைத்துள்ளதை எப்போதாவது எறியுமானால், அங்கே எந்தக் கிறிஸ்துமஸ் ஆவியும் விடப்பட்டிருக்காது, ஜனங்களோ திகிலடைந்து வீதிகளில் ஓடி சத்தமிட்டு கதறிக் கொண்டிருப்பார்கள். உங்களால் எங்கும் மறைந்து கொள்ளவே முடியாது. மறைந்து கொள்வதற்கான வழியேக் கிடையாது.
114. முடிவோ இப்பொழுதே உள்ளது. நாம் முடிவிலே இருக்கிறோம், அடையாளங்களும், அதிசயங்களும் தோன்றுகின்றன, மேசியாவோ தம்மைத்தாமே ஆவியில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
115. அந்த ஆவியினால் அவர் காலத்தினூடாகத் தம்மை அதிக அதிகமாக வெளிப்படுத்திக்கொண்டே வந்து முடிவிலே அந்தப் பரிபூரண மனிதருக்குள்ளாகப் பிறந்தார்.
116. இப்பொழுது மெத்தோடிஸ்டு காலங்களினூடாக, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தேயினூடாக முடிவிற்கு வந்து, இப்பொழுது பரிபூரணமான ஒருவர் ஒரு சரீரத்தில் திரும்பி வருகிறதற்கு முன்னர் இதோ அது வெளிப்படுத்தப்படுகிறது; அவருடைய சபையை ஒன்றுசேர்க்க வெளியிலிருந்து இழுத்து, அவர்களை ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்தும் வெளியேக் கொண்டு வருகிறார். அவர்களை அவரண்டைக் கொண்டு வருகிறார், ஏனென்றால், அவர் சீக்கிரத்தில் பிரசன்னமாவார். சபைகளோ அதற்கான பதிலைப் பெற்றிருக்கவில்லை.
117. ஆகையால் காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதினால் சனகெரீம் சங்கத்திற்குள் அழைக்கப்பட, சங்கங்கள் ஒன்று கூடின. அப்பொழுது அவர்களடத்தில் “வேதவாக்கியங்களைப் படித்துப் பாருங்கள். இந்த மேசியா எங்கே பிறக்க வேண்டியவராயிருக்கிறார்?” என்று ராஜா கேட்டான்.
118. விநோதமான காரியம் என்னவென்றால், அவர்கள் அவரை வேதவாக்கியத்தில் எங்கே கண்டனர் என்று உங்களுக்குத் தெரியுமா? மீகா தீர்க்கதரிசனத்தில் கண்டறிந்தனர். "யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதேயாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; நீ உருளும் பரிசுத்தராயிருக்கவில்லையா? நீ அவைகள் எல்லாவற்றிலும் சிறியதல்லவா? ஆனால் என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்”. அங்கேதான் அவர்கள் அதனைக் கண்டறிந்தனர்.
119. ஆகையால் அந்த வான சாஸ்திரிகள், அவர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு வாசலைவிட்டு வெளியேறினர். அவர்கள் அந்தப் பழைய, குளிர்ந்துபோன, பின் வாங்கிப்போன, சம்பிரதாயமான ஸ்தலத்தை விட்டு வெளியேறினவுடனே, மீண்டும் அந்த நட்சத்திரம் அங்கே தொங்கினது. அப்பொழுது அந்த நட்சத்திரம் அங்கே இருந்தது. எனவே வேதமோ, "அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்” என்று கூறியுள்ளது. ஓ, அவர்கள் அதைக் கண்டபோது, அவர்கள் சற்று சத்திமிட்டனர் என்றே நான் கூறலாம். அதாவது அவர்கள் கண்டிருந்த ஆசீர்வாதமான அந்த இயற்கைக்கு மேம்பட்ட அந்த நட்சத்திரம், இவர்கள் அவர்களுடையப் பண்டைய, குளிர்ந்துபோன, சம்பிரதாய முறைகளிலிருந்து வெளிவந்தவுடனே, அது மீண்டும் பிரசன்னமானது. அது அங்கே இருந்தது.
120. எனவே அது அவர்களை பெத்லகேமிற்கு வழிநடத்திச் சென்றது, அவர்கள் அங்கே அந்த ஒருவரை, இம்மானுவேலாய் இருந்த அவரை, ஒரு தச்சனுடையப் பட்டறையில் எழையாய் வளர்க்கப்பட்டுக்கொண்டிருந்த ஒருவரைக் கண்டனர். சாஸ்திரிகள் வைத்திருந்த எல்லாவற்றையும் இறக்கி, அவைகளை அவருடைய பாதத்தண்டையில் வைத்தனர். அப்பொழுது அவர்கள் அவரைத் தொழுது கொண்டனர், ஏனென்றால் அவர் ஒளியாக வந்திருந்தையும், உலகத்தின் இரட்சகராகப் பிறந்திருந்ததையும் அவர்கள் அறிந்திருந்தனர். எனவே அவர்கள் வைத்திருந்த எல்லாவற்றையும் அளித்துவிட்டனர், அவர்கள் அளித்தனர், ஏனென்றால் தேவன் அவரை அளித்திருந்தாரே!
121. நண்பனே, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ”, மெத்தோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பிரஸ்பிடேரியனாகவோ, மத நம்பிகையற்றவனாகவே, நீங்கள் என்னவாயிருந்தாலும், "அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி," அது உங்களுக்காகவும் எனக்காகவுமே, "இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” நீங்கள் எதைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். ஜீவனைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
122. நாம் இப்பொழுது ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தில், நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனித்துப் பார்ப்பீர்களேயானால், அவர் மீண்டும் பூமிக்கு வருவதற்கு சமீபமான நேரத்தில் இருக்கிறோம்.
123. யோசேப்போ யாராயிருந்தான் என்பதை நோக்கிப் பாருங்கள், யோசேப்பிற்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியை நோக்கிப் பாருங்கள். அவன் ஆவிக்குரியப் பிரகாரமாயிருந்தபடியால், தன்னுடைய சகோதரர்களால் பகைக்கப்பட்டான். அவன் தரிசனங்களைக் கண்டான். ஆனால் அவனுடையத் தகப்பனால் நேசிக்கப்பட்டான். அது இயேசுவைப் போன்றிருக்கவில்லையா? இயேசுவானவரைப் போன்றே தன்னுடைய சகோதரர்களால் ஏறக்குறைய முப்பது வெள்ளிக் காசுகளுக்காக விற்கப்பட்டான், இயேசுவான வரைப் போன்றே காட்டிக் கொடுக்கப்பட்டான். இயேசுவானவரைப் போன்றே மரித்துப் போகும்படியாக ஒரு குழியில் தூக்கியெறியப்பட்டான். அதன் பின்னர் தூக்கியெடுக்கப்பட்டு, பார்வோனின் வலது கரமாக்கப்பட்டு, எந்த மனிதனும் பார்வோனிடத்தில் யோசேப்பினாலேயன்றி வர இயலாத நிலைக்கு மாற்றப்பட்டான். யோசேப்பு பார்வோனின் வலதுபாரிசத்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள், “தெண்டனிட்டுப் பணியுங்கள், ஏனென்றால் யோசேப்பு வந்து கொண்டிருக்கிறாரே!" என்று கூச்சலிட்டனர்.
124. வேதம், "அவர் வரும்போது, மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறது போல இருக்கும். அப்பொழுது முழங்கால் யாவும் முடங்கும், அவர் தேவ குமாரனாயிருக்கிறார் என்று நாவுகள் யாவும் அறிக்கைப்பண்ணும்” என்று உரைத்துள்ளது. அந்த நேரத்தில் எல்லா தேசங்களும் துக்கித்து நடுங்கும்.
125. அது என்னவாயிருந்தது? அது முடிவிலே வெளிப்பப்படுத்தப் பட்டது. அது ராஜாவாகிய தாவீதிக்குள்ளும் வெளிப்பட்டது. காரணம் அவர் தீர்க்கதரிசியாய், ஆசாரியராய், ராஜாவாயிருந்தார். இயேசுவைப் போன்றே தாவீது எருசலேமிலே சிங்காசனத்திலிருந்து இறக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டான். தாவீது தன்னுடைய சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு இராஜாவாய் மலையின் மீது அமர்ந்து எருசலேமை நோக்கி அழுதான். தாவீதின் குமாரன் வந்தபோதும் அதே மலையின்மேல் அமர்ந்து தன்னுடைய சொந்த நகரத்தில் ஒரு புறக்கணிக்கப்பட்ட இராஜாவாய், எருசலேமை நோக்கிப் பார்த்து கண்ணீர்விட்டு, “கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” என்றார்.
126. அவர்கள் ஏன் அவரை இவ்வாறு அழைத்தனர்? "பெயல்செபூல், ஒரு குறி சொல்பவர், ஒரு பொல்லாத ஆவி'.
127. அவருடைய ஊழியம் துவங்கினபோது, ஒரு வயோதிக செம்படவன் அவரண்டை அழைத்துக் கொண்டு வரப்பட்டான், அவனால் தன்னுடைய சொந்தப் பெயரையுங்கூட கையொப்பமிட முடியாததாயிருந்தது. அப்பொழுது அந்த வயோதிக செம்படவனை நோக்கிப் பார்த்து, உடனே அவர் அவனுடையப் பெயர் என்னவென்பதை அவனிடத்தில் கூறினார். மேலும் அவர் அவனுடையத் தகப்பனாரின் பெயர் என்னவென்பதையும் அவனிடத்தில் கூறினார். எனவே அந்த வயோதிக செம்படவனோ தன்னுடைய முழு இருதயத்தோடு அவரை விசுவாசித்தான்.
128. அப்பொழுது அங்கு நின்றுகொண்டிருந்த பிலிப்பு என்னும் பெயர் கொண்ட மற்றொருவனும் மனமாற்றமடைந்தான். எனவே அவன் புறப்பட்டு மலையைச் சுற்றி முப்பது மைல் தூரம் சென்றபோது, நாத்தான்வேல் என்னும் பெயர்கொண்ட ஒருவன் ஒரு மரத்தின் கீழ் ஜெபித்துக்கொண்டிருந்ததைக் கண்டான். அப்பொழுது இவனோ, “நாங்கள் கண்டவரை வந்து பார். நீர் யேகோவாவின் ஒரு மகத்தான விசுவாசி என்பதை நான் அறிவேன். நான் உம்மை அறிந்துள்ளேன். ஆனால் யேகோவா ஒரு மேசியாவாவின் வாக்களித்துள்ளாரே, அவரை நாங்கள் கண்டோம். அவர் ஒரு சாதாரண மனிதனாயிருக்கிறார், அவரைக்குறித்து பெரிதானது ஒன்றுமேயில்லை. அவரைக் குறித்து பெருமையான, கல்விப்பயின்றது சம்மந்தமான எந்தக் காரியமும் கிடையாது. அவர் ஒரு தச்சனாயிருக்கிறார்,” என்று கூறினான். அவர் மூலம் பொருட்களுக்கும், மற்றும் ஒரு மனிதனுடைய ஆத்துமாவிற்கும், இரண்டிற்குமே ஒரு தச்சனாக இருந்தார்.
129. அப்பொழுது நாத்தான்வேல் அவனை நோக்கிப் பார்த்து, "இப்பொழுது ஒரு நிமிடம் பொறும், நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா?” என்று கேட்டான். பாருங்கள், அவர்கள் அதை எருசலேமிலிருந்து எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர்.
130. அங்கேதான் உங்களில் அநேகர் இன்றைக்கும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே நோக்கிப் பார்க்காதீர்கள். பிசாசு எப்பொழுதுமே ஒரு மனிதனுடையத் தலையையும், அவனுடையக் கண்களையும் உபயோகிக்கிறான். தேவனோ அவனுடைய இருதயத்தை உபயோகிக்கிறார். நீங்களோ நோக்கிப்பார்த்தது, “ஓ, அது அவ்வாறாக இருக்க முடியாது. அது பகுத்தறிவிற்கு ஒவ்வாதது. பாருங்கள், என்னால் சொல்ல முடியும், என்னால் அதை நோக்கிப் பார்க்க முடியும்'' என்று கூறிவிடலாம். அங்குதான் பிசாசு இருக்கிறான். பிசாசு மனிதனுடையக் கண்களை உபயோகிக்கிறான். அவன் அதை ஆரம்பத்தில் ஏவாளுக்குச் செய்தான். அது முதற்கொண்டே அவன் அதை செய்து வருகிறான்.
131. ஆனால் தேவன் ஒரு மனிதனிடத்தில் அவர் அவனுடைய இருதயத்தில் ஜீவிக்கிறார் என்று கூறுகிறார், எனவே நீங்கள் காண முடியாதக் காரியங்களை உங்களுடைய இருதயம் விசுவாசிக்கச் செய்கிறது. காரணம், "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.”
132. நிச்சயமாகவே, இந்த மகத்தான சபை அதனுடைய மகத்தான ஜனங்களோடு, உலகத்தைச் சுற்றிலுமுள்ள அதனுடைய இலட்சக்கணக்கானோரோடு, உலகத்தினுடைய வல்லமைகளை கட்டுப்படுத்துகிறது, அது மகத்தானதாய் இருக்க வேண்டும். அதை நோக்கிப் பார்க்க வேண்டாம்.
அது ஒரு ஆவியாயுள்ளது, ஆவியாயிற்றே!
அப்பொழுது நாத்தான் வேலோ "நன்மையான எந்தக் காரியமாவது உண்டாகக்கூடுமா?” என்று கேட்டான்.
அதற்கு அவனோ, “நீ வந்து பார்” என்றான்.
133. அப்பொழுது அவர் அவன் வருவதைக் கண்டபோது, இயேசு அவனை நோக்கிப் பார்த்தார். அவர் அப்பொழுது அவன் பேரில் தம்முடைய மேசியாவின் அடையாளத்தை நிகழ்த்தப் போவதாயிருந்தார். எனவே அவர், “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார்.
134. அதற்கு அவனோ, “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர் ?" என்றான். அது அவனை வியப்படையச் செய்துவிட்டது. "நீர் என்னை எப்படி அறிவீர்?"
135. அப்பொழுது அவரோ, "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்" என்றார். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறைகள் தட்டுகிறார் - ஆசி.] அவரால் எப்படி அதற்கு முந்தின நாளே மலையைச் சுற்றி முப்பது மைல் தூரத்தில் இருந்த அவனைக் காண முடிந்தது?
136. அவன் பேரிலேயே அற்புதமானது நிகழ்த்திக் காட்டப்பட்டபோது, அவன் நோக்கிப் பார்த்து, “ரபீ, நீர் தேவனுடையக் குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான்.
137. அப்பொழுது இயேசு, "நான் இதை உனக்கு முன்பாகச் செய்த படியால் நீ அதை விசுவாசிக்கிறாய், நீ இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய். ஏனென்றால் ஒரு நேரம் வரும்போது, பரலோகத்திலிருந்து தூதர்கள் இறங்குகிறதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
138. அப்பொழுது அங்கே அருகில் அறிவாற்றலுள்ள சிலர் நின்றிருந்தனர். அவர்கள் அந்தப் பெரிய சபையைச் சார்ந்தவர்களாயிருந்தனர். எனவே அவர்களால் தங்களுக்கு உள்ள நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள், “இந்த மனிதன் ஒரு குறிசொல்பவர். அவர் பெயல்செபூல். அவர் பித்துப்பிடித்தவர். அவர் தன்மீது ஒரு பொல்லாத ஆவி பீடித்துள்ள ஒரு சமாரியன். அவர் பைத்தியமாகிவிட்டார்” என்று கூறினர். அவர்கள் வெளிப்படையாகவே அவரைப் பித்துப்பிடித்தவர் என்று பலரறியக் கூறினர்.
139. அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை அந்தவிதமாகக் கூறுகிறபடியால், நான் உங்களை அதற்காக மன்னித்துவிடுவேன். ஆனால் பூமியின்மேல் பரிசுத்த ஆவியானவர் வந்து நான் செய்துகொண்டிருக்கிற அதேக் காரியத்தை செய்யப்போகும் ஒரு நேரம் வரும்” என்றார். (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடையக் கரங்களை ஒன்று சேர்த்து ஒரு முறைத் தட்டுகிறார் - ஆசி.] “அப்பொழுது ஒரு வார்த்தை அதற்கு விரோதமாகக் கூறினால், அது ஒருபோதும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படவே மாட்டாது”. (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி.)” அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்களே! அதற்கு விரோதமான ஒரு வார்த்தைக் கூறுதல் உங்களை என்றென்றைக்குமாய் முடிவுண்டாக முத்தரித்துவிடுகிறது.
140. நாம் எங்கே ஜீவிக்கிறோம்? நாம் மீண்டும் கிறிஸ்துமஸில் இருக்கிறோம். வான சாஸ்திரிகள் வழிநடத்தப்பட்டது போல, நாமும் அந்த அளவிற்கு வழிநடத்தப்படும்படிக்கு நம்முடைய மார்க்கமானது நம்மைப் போதுமான அளவு தேவனண்டை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளதா என்றே நான் வியப்புறுகிறேன்.
141. இப்பொழுது, நினைவிருக்கட்டும், எப்படியாயினும் மூவருடைய ஜனங்கள் மாத்திரமே பூமியில் இருந்தனர்; காம், சேம் மற்றும் யாப்பேத்துடைய ஜனங்கள்; அது யூதர், புறஜாதியார் மற்றும் சமாரியராயிருந்தது.
142. இப்பொழுது, யூதரும் சமாரியரும் அவருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர்; புறஜாதிகளாகிய நாம் அல்ல. நாம் அஞ்ஞானிகளாய் அந்த நாட்களில் இருந்து கொண்டு ஊமையான விக்கிரகங்களைச் சுமந்து கொண்டிருந்தோம். நம்முடைய முதுகில் தடியோடும், ஒரு குறுந்தடி கொண்டும் நம்மால் முடிந்ததை கொன்று சாப்பிட்டு வந்தோம்; புறஜாதிகளோ ஊமையான நாய்கள்.
143. ஆனால் அவர்கள் ஒரு மேசியாவிற்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தும் காணத் தவறிப்போயினர், ஏனென்றால் அவர்கள் அவருடைய அடையாளத்தை அடையாளங்கண்டு கொள்ளவில்லை. அந்தக் காரணத்தினால்தான் எருசலேம் பதிலைப் பெற்றிருக்கவில்லை.
144. அந்தக் காணரத்தினால்தான் இன்றைக்கும் அவர்கள் பதிலைப் பெற்றிருக்கவில்லை. தேவன் மாத்திரமே பதிலை உடையவராயிருக்கிறார்.
145. அவர்கள் இருந்த வண்ணமாகவே அவர்களைச் சற்று நேரம் நோக்கிப் பார்ப்போம். அங்கே அவருக்காக மற்றொரு வகுப்பு ஜனங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர், அது பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தில் உள்ளது, அதுதான் சமாரியர்கள். ஒரு மேசியா வரப்போவதாயிருந்ததை அவர்கள் விசுவாசித்தனர்.
146. எனவே ஞாபகமிருக்கட்டும், அவர் அந்த அடையாளத்தை ஒருமுறை கூட புறஜாதிகளுக்கு முன்பாக செய்யவேயில்லை. அவர் வரப்போவதை எதிர்நோக்கியிருந்த சமாரியர்களுக்கும், யூதர்களுக்கும் மட்டுமே செய்தார். அவர்களோ அதன் மூலம் அவரை விசுவாசிக்கவில்லை ; அவர்களில் சிலர் விசுவாசித்தனர், சிலர் விசுவாசிக்கவில்லை.
147. அவர் சமாரியாவிற்கு வந்தபோது, அவர் ஜனங்களை தூர அனுப்பிவிட்டார், அவருடைய சீஷர்களும் ஊருக்குள் ளேப் போயிருந்தார்கள். அவரோ காத்திருந்தார். காரணம் அவர் அவர்களிடத்திலோ, "போய் சாப்பிட ஏதாகிலும் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று கூறியிருந்தார். அது ஏறக்குறைய அந்த நாளில் இந்த மணி நேரமாய் இருந்தது என்றே நான் யூகிக்கிறேன்.
148. எனவே அவர்கள் சென்றிருந்தபோதோ, ஓர் - ஓர் அழகானப் பெண்மணி தண்ணீர் மொள்ளக் கிணற்றண்டை வந்தாள். ஓ, நாமோ அவளை ஒரு விபச்சாரி என்று அழைக்கிறோம். அவள் விபச்சாரியாயிருக்கலாம். அவ்வாறிருந்தாலும் நாம் அவளை ஓர்- ஓர் அழகானத் தோற்றகொண்ட பெண்மணி என்றே கூறுவோமாக. அவளோ தண்ணீர் மொள்ளவே இந்தக் கிணற்றண்டைக்கு வந்தாள். அப்பொழுது அவளோ, “ஸ்திரீயே, தாகத்துக்கு தா” என்று கூறின ஒரு சத்தத்தைக் கேட்டாள்.
149. அப்பொழுது அவள் சுற்றும் முற்றும் பார்த்தபோது, அங்கே ஒரு யூதன் அமர்ந்திருந்தார். அப்பொழுதோ அங்கே பிரிவினை உண்டாயிருந்தது. எனவே அவர்கள் எந்தவித சம்மந்தமும் கலவாதிருந்தனர். ஆகவே அவள் அவரிடத்தில் இவ்வாறு கூறினாள். அவள், “ஏன், நீர் ஒரு யூதனாயிருக்க, சமாரிய ஸ்திரீயாகிய என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம்? நாங்கள் ஒருவரோடு ஒருவர் சம்மந்தம் கலந்துகொள்வதில்லை. ஆகையால் உமக்காக என்னிடத்தில் அதைக் கேட்பது சரியல்ல” என்றாள்.
150. அதற்கு அவரோ, “ஆனால் ஸ்திரீயே, உன்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தது யாரென்று நீ அறிந்திருந்தாயானால், அப்பொழுது நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய் என்றார்.
151. அப்பொழுது அவளோ , "எங்கேயிருந்து...... நீர் எங்கேயிருந்து தண்ணீர் மொள்ள முடியும்?'' என்றும், “மொண்டுகொள்ள உம்மிடத்தில் ஒன்றுமில்லையே” என்றும் கூறினாள்.
152. அவர் அந்த உரையாடலைத் தொடர்ந்து நிகழ்தினார், எனவே அது உண்மையாகவே தொடர்ந்தது. முடிவிலே அவர் அவளிடத்தில் கூறிவிட்டார், அதாவது அவளுடையத் தொல்லை எங்கேயிருந்தது என்பதை அவர் அறிந்துகொண்டார். எனவே அவர், “ஸ்திரீயே, போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அதற்கு அவளோ, “எனக்குப் புருஷன் இல்லையே” என்றாள்.
153. அப்பொழுது அவர், "அது உண்மை. நீ ஐந்து முறை விவாகம் பண்ணப்பட்டிருக்கிறாய், ஆனாலும் இப்பொழுது உன்னோடிருக்கிற ஒருவனும் உன்னுடைய புருஷன் அல்ல” என்றார்.
154. அவள் என்னக் கூறினாள் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் மேசியாவிற்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்'' என்றாள். அங்குதான் காரியம். “நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் இந்தக் காரியங்களை எங்களுக்குச் சொல்லுவார் என்று நாங்கள் அறிவோம். மேசியா வரும்போது அவர் இந்த மேசியாவின் அடையாளத்தைச் செய்வார் என்று நாங்கள் அறிவோம். ஆனால் நீரோ வெறுமென ஒரு..... மரத்துப்போன தழும்புகள் உம்முடைய கரங்களில் உள்ளன. நீர் ஒரு தச்சன், ஒரு யூதன். ஆயினும் நீர் ஒரு தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும் இல்லையென்றால் உம்மால் இதைச் செய்ய முடியாது. ஆனால் மேசியா வரும்போதோ... நாங்கள் இங்கே அவருக்காகத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். அவர் வரும்போது, அவர் இதைச் செய்வார்”.
அதற்கு இயேசு, “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். ஓ, என்னே !
155. அப்பொழுது அவள் அந்தத் தண்ணீர் குடத்தைக் கீழே வைத்துவிட்டாள். அவள் உடனே ஊருக்குள்ளே போய், “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் மேசியாதானோ?" என்றாள். அப்பொழுது அந்தப் முழு ஊராருமே புறப்பட்டனர். சபைகளோ அந்த பதிலைப் பெற்றிருக்கவில்லை, ஆனால் இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களோ தேவனை நோக்கிப்பார்க்கிறார்கள்.
156. இன்றைக்கு நம்முடைய மார்க்கமானது நம்மை அந்த மதிநுட்ப அறிவாற்றலுக்கு கொண்டுவந்துள்ளதா என்றே நான் வியப்புறுகிறேன். நாம் போதிக்க முயற்சித்துக் கொண்டிருப்பது நம்முடைய மனிதனால் உண்டாக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட வேதசாஸ்திரமாயில்லாமல், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலிலும் வல்லமையிலும் உள்ளதையேப் போதிக்கிறோம் என்றும், பரிசுத்த ஆவியானவர் இன்றைக்குத் தேசத்தில் உள்ளார் என்பதையுமே நாம் அறிந்துகொள்ள வேண்டும். சகோதரனே, சகோதரியே இந்தக் கடைசி மணி வேளையில், இது முடிவின் நேரத்திற்கு வந்து கொண்டிருக்கிறபடியால், நீங்கள் தேவனோடு எப்படி நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்டறியும்படி உங்களுடைய ஆத்துமாக்களை சோதித்தறியுங்கள்.
157. இது கிறிஸ்துமஸாய் உள்ளது. வீதியில் எங்கும் பரவியுள்ள எல்லா அற்பமான ஆரவாரமும், சாந்தா கிளாஸ், ஒரு ஜெர்மனியக் கட்டுக்கதை, ஒரு கத்தோலிக்க கோட்பாடு போன்ற இவையாவுமே ஒரு சிறு துளியளவும் உண்மையானதல்ல. அது மிக அதிகமான அமெரிக்கர்களின் இருதயத்தில் கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் சாந்தா கிளாஸைப் பொருட்படுத்துகிறதில்லை. கிறிஸ்துமஸ் கிறிஸ்துவையே பொருட்படுத்துகிறது. அது ஒரு மனிதன் தன்னுடைய வாயில் ஒரு குழலை வைத்துக்கொண்டு, ஒரு புகைப் போக்கியின் வழியாக இறங்கி வருவதல்லவே! அதைப் போன்ற அப்படிப்பட்டக் காரியத்தை உங்களுடையப் பிள்ளைகளுக்குப் போதித்துவிட்டு, பின்னர் அவர்கள் உள்ளத்தில் உண்மையாய் உயர்ந்திருக்கும்படி நீங்கள் அவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எனவே அவர்களுக்கு சத்தியத்தைக் கூறுங்கள், ஏதோ ஒரு கட்டுக்கதையை அல்ல. ஆகையால் அவர்களிடத்தில், “தம்முடையக் குமாரனை அனுப்பின பரலோகத்தின் தேவன் ஒருவர் உண்டு என்றும், அதைத்தான் கிறிஸ்துமஸ் பொருட்படுத்துகிறது என்றும், அவர் மீண்டும் வருவதற்கு சமீபமாயிருக்கிறார்” என்றும் கூறுங்கள்.
158. அழுத்தம் பூமிக்கு வரத்துவங்கும் போது, பிசாசு பகட்டாராவாரம் போன்றத் தன்னுடையக் காரியங்களை நீங்கள் கண்களினால் காணும்படிக்கு முன்வைக்கிறான். தேவனோ நீங்கள் காண முடியாத ஆவியாயிருக்கிறத் தம்முடையதை நீங்கள் விசுவாசிக்கும்படி முன்வைக்கிறார்.
159. எருசலேம் பதிலைப் பெற்றிருக்கவில்லை. ஜெபர்ஸன்வில் அதற்கான பதில்களைப் பெற்றிருக்கவில்லை; லூயிவில்லும் பெற்றிருக்கவில்லை, அமெரிக்காவும் பெற்றிருக்கவில்லை, உலகமும் பெற்றிருக்கவில்லையே.
160. தேவனோ பதில்களை உடையவராயிருக்கிறார். அவர் அவர்களுக்கு வெளிப்படுத்துவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். எனவே ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த அதே மாறாத இயேசு உயிர்த்தெழுந்து இன்றைக்கும் ஜீவிக்கிறார் என்றும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறதவராயிருக்கிறார் என்றும் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
161. நீங்கள் இதை உங்களுடைய முழு இருதயத்தோடு பயபக்தியாய் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசித்தால்..... நீங்கள் இதை இதற்கு முன்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்திருக்கலாம், ஆனால் அவர் தம்மை வெளிப்படுத்த ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பு, நீங்கள் உங்களுடையக் கரங்களை உயர்த்துவீர்களா? ஒவ்வொரும் தங்களுடையத் தலைகளைத் தாழ்த்தியிருக்கையில், உங்களுடையக் கரங்களை உயர்த்துவதன் மூலம், அதாவது உங்களுடையக் கரங்களை உயர்த்தி, "சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள். அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் எப்படியோ மற்றவர் மூலமாக விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இந்தக் காலையில் இங்கே இந்த மூலையில் உள்ள இந்தச் சிறிய பழைய ஸ்தலத்திற்கு வழிநடத்தப்பட்டிருக்கிறேன். ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவர் இப்பொழுது இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அவரைத் தொழுதுகொள்ள விரும்புகிறேன். எனவே நான் என்னுடையக் கரத்தை உயர்த்தியுள்ளேன்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. ஓ, என்னே! இருபது இல்லை, முப்பது கட்டிடம் முழுவதுமே உயர்த்தியுள்ளனர்.
162. அன்புள்ள தேவனே, நீர் அந்தக் கரங்களைக் காண்கிறீர், நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறீர். அவர்கள் தேவையுள்ளவர்களாயிருக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் ஏதோ ஒன்று, அவர்களைப் பார்க்கிலும் மகத்தான ஒருவர் இருந்திருந்தாலொழிய அவர்கள் அந்தக் கரத்தை ஒருபோதும் உயர்த்தியிருந்திருக்கமாட்டார்கள். அவ்வாறில்லையென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த வழிகளில் சென்றிருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டதினால் விசுவாசித்திருக்கிறார்கள். கர்த்தாவே, எங்களுடைய வேதவாக்கியங்களான உம்முடையப் பரிசுத்த வேதம், "விசுவாசம் கேட்பதினாலே, தேவனுடைய வார்த்தையைக் கேட்பதனாலே வரும்” என்று எங்களுக்குக் கூறுகிறது. அது கரடுமுரடாய் இருந்தாலும், அதே சமயத்தில் எளிமையான வழியாயும், நாங்கள் அதை ஜனங்களுக்கு அளிக்க வேண்டிய ஒரே வழியாயும் உள்ளது. அவர்களோ அதை விசுவாசித்துள்ளனர். அநேக, அநேகக் கரங்கள் மேலே உயர்த்தப்பட்டுள்ளன. நான் அவர்கள் ஒருவரையும் அறியேன். நீரோ அவர்கள் எல்லோரையுமே அறிந்திருக்கிறீர். ஆனால் அவர்களின் உட்புறத்தை நான் அறிவேன், அவர்கள் ஓர் ஆவியினால் ஆளுகைச் செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றனர், அவர்களுக்குள்ளிருக்கிற அந்த ஆவியானது, “நீ தவறாயிருக்கிறாய்” என்று கூறியுள்ளது.
163. அங்கே அவர்களுக்கு அருகில் மற்றொரு ஆவி நின்றுகொண்டு, "என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், நான் உங்களுடைய இரட்சகர்” என்று கூறுகிறது. எனவே அவர்கள் எல்லா விஞ்ஞான விதிமுறைகளையும் தங்களுடையக் கரங்களை உயர்த்துவதன் மூலம் மீறிவிட்டனர். காரணம் தேவன் ஒருவர் அங்கே உண்டு என்றும், அவரே விஞ்ஞான விதிமுறைகளை உண்டுபண்ணினவர் என்றே தங்களுடையக் கரங்களை உயர்த்தி, விசுவாசத்தின் மூலம் அங்கு சென்றடையவும், இரட்சகரைப் பற்றிப் பிடித்துக் கொள்ளவும், அவர்களுடைய இரட்சகராகவே அவரை ஏற்றுக் கொள்ளவுமே விரும்பினர். எனவே கர்த்தாவே, அவர்கள் அதை இந்தக் காலையில் செய்துள்ளனர்.
164. இப்பொழுதே அவர்களை உம்முடைய இராஜ்யத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்ளும். அவர்கள் இந்தச் செய்தியின் வெற்றிச் சின்னங்களாயிருக்கிறார்கள். நீர் அவர்களை உம்முடையப் பிரசன்னத்திற்குள்ளாக, உம்முடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். அவர்கள் இங்கே சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து, அவர்கள் நாளானது சமீபித்து வருகிறதைக் காண்கையில், அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்கையில், எந்த நேரத்திலும் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காக எதிர்நோக்கியிருப்பார்களாக, ஏனென்றால் அவர் வருவதற்கு மிகவும் சமீபமாய், மிகவும் சமீபமாய் இருக்கிறார். அவரோ அவருடைய வழியில் இருக்கிறாரே.
165. ரெபேக்காள் எழுந்து ஒட்டகத்தின் மேலேறித் தன்னுடையக் காதலன் ஈசாக்கை சந்திக்க புறப்பட்டுச் சென்றாள். அப்பொழுது ஈசாக்கோ ஏற்கெனவே பாளயத்திலிருந்து புறப்பட்டு வந்து, சாயங்கால நேரத்தில் வெளியே வயல்வெளியில் இருந்தபோது, அவள் வருவதை அவன் கண்டான். அது முதல் பார்வையிலேயே காதலாயிருந்தது. எனவே அவள் ஒட்டகத்திலிருந்து குதித்து, அவனைச் சந்திக்க ஓடினாள். அப்பொழுது அவள் ஆபிரகாமினுடையக் கூடாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு, சுதந்தரவாளியாகி, எல்லாவற்றையுமே சுதந்தரித்துக் கொண்டான்.
166. தேவனே, இப்பொழுது இது சாயங்கால வேளையாயுள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். நீரோ அது வெளிச்சமாயிருக்கும் என்றும், பரிசுத்த ஆவியானவர் இங்கே பூமியின் மேல் இருப்பார் என்றும், நீர் உம்முடையக் கிருபையினால் தெரிந்துகொண்டுள்ள ஒரு சிறு மந்தைக்குள்ளாக அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்திக் கொண்டிருப்பார் என்றும் கூறினீர். ஆகையால் நீர் - நீர் உம்மை ஒவ்வொருவருக்கும் மகத்தாய் வெளிப்படுத்த வேண்டும் என்று இப்பொழுதே நான் ஜெபிக்கிறேன். அவர்கள் தங்களுடையப் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவார்களாக.
167, அவர்கள் எங்காவது ஓர் - ஓர் ஊற்றண்டை , ஒரு பூமிக்குரிய ஊற்றண்டைக்கு வருவார்களாக. அடுத்து அவர்கள் பரலோகத்திற்குரியவர்களாய் வந்துள்ளபடியால் உமது நேச குமாரனாகியக் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, தங்கள் பாவங்களைப் போக்கி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்களாக. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று, சம்பவிக்க ஆயத்தமாகிகொண்டிருக்கிற இந்த மகத்தான நாடகத்தில் தங்களுடையப் பாகத்தை ஏற்று நடிக்கும்படியான ஸ்தானத்திற்குள் பொருத்தப்படுவார்களாக.
168. பிதாவே நாங்கள் இந்தக் காலையில் எங்களுடையக் கூட்டமானது உம்முடைய ஞானத்தின் அதிகார எல்லையில் இருந்தது என்பதை விசுவாசிக்கிறோம். முட்டாள்த்தனமான எந்தக் காரியமும் உம்மிடத்தில் கிடையாது. நீர் அளித்திருக்கிற ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாயிருக்கிறது. புருஷரும் ஸ்திரீகளும் தேசத்தின் வித்தியாசமானப் பாகங்களிலிருந்து வந்து இங்கு அமர்ந்துள்ளனர். நீரோ உம்முடைய ஆவியினால் ஒரு விளங்கிக்கொள்ள முடியாத வழியில் அவர்களைக் கொண்டுவந்தீர். அவர்கள் உம்மை ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்பொழுதே அவர்களை ஏற்றுக்கொள்ளும். நான் அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மண்டை ஒப்படைக்கிறேன்.
169. இப்பொழுதும் கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த ஆவியானது வியாதியஸ்தரை சுகப்படுத்தட்டும். நாங்கள் வெறுமென ஒரு சரித்திரமாய் இருந்து வருகிற ஒரு வேதாகமத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை புதியதாக உம்மண்டை மனமாற்றமடைந்துள்ள இவர்கள் அதை அறிந்துகொள்ளும்படிச் செய்யும். அது ஜீவிக்கிற ஒன்றாய், நிகழ்காலத்தில் இப்பொழுதும் ஜீவிக்கின்றதாயுள்ளது. அவர் மாறாத கர்த்தராகிய இயேசுவாயிருக்கிறார்.
170. இப்பொழுது கர்த்தாவே, நாங்கள் எங்கள் இருதயங்களை திறந்திருக்கையில், அவர் வந்து எங்களுடைய மாம்சத்தையும், எங்களுடைய சரீரங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வாராக. எல்லா சந்தேகங்களையும் மற்றும் உலகப்பிரகாரமான எல்லாவற்றையும் எடுத்துப்போடும். உம்முடையச் சித்தம் எங்கள் மத்தியிலே கிரியைச் செய்யும்படியான சுத்தமான பாத்திரங்களாயிருக்கும்படிக்குப் பரிசுத்த ஆவியானவர் எங்கள் மூலம் அசைவாடட்டும். நாங்கள் எங்களுடைய சொந்த நீதியினால் சுத்தமாயிருக்கிறோம் என்ற காரணத்தினால் அல்ல, ஆனால் எங்களை சுத்தமாக்கியிருக்கிற கர்த்தராகிய இயேசுவின் மேல் நாங்கள் விசுவாசமாய் இருக்கின்ற காரணத்தினாலேயாகும். நீர் இன்னமும் கர்த்தராகிய இயேசுவாயிருக்கிறீர் என்பதைப் இந்தப் புதியதாய் மனமாற்றமடைந்துள்ளவர்கள் காணும்படியாக நீர் பூமியிலிருந்த போது செய்த காரியங்களையே செய்யும் - செய்துமிருக்கிறீரே. நீர் மரித்துவிடவில்லை. ஆனால் நீர் ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே உயிர்த்தெழுந்து இன்றைக்கும் உயிரோடிருந்துகொண்டு நீர் கூறின ஒவ்வொரு வாக்குத்தத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர். ஆமென்.
171. இது ஒரு கிறிஸ்துமஸ் கீதம் அல்ல என்பதை நான் அறிவேன், ஆனால் இதுவோ நாங்கள் நேசிக்கிறோம் என்ற எங்கள் இருதயத்தின் ஒரு பாடலாயுள்ளது. இப்பொழுது செய்தியோ முடிவுற்றுவிட்டது, அது ஒருவிதமான வெட்டுதல் போன்றதான ஒரே வழியாய் மாத்திரமே உள்ளது.
172. இன்றைக்கு நம்முடையப் பிரசங்கபீடங்களுக்குத் தேவை என்னவென்றால் இங்கே நறுமணமூட்டுகிற இந்த மார்க்கம் அல்ல. அதற்கு சத்தியமே தேவைப்படுகிறது. சத்தியம், அது வேதாகமத்திலிருந்து பிரசங்கிக்கப்பட வேண்டுமே! எந்த வித்தியாசமான வியாக்கியானங்களையும் செய்யாதீர்கள். வேதம் என்னக் கூறுகிறதோ, அதை அப்படியேக் கூறுங்கள். தேவன் தம்முடைய வார்த்தைக்குக் கடமைப்பட்டவராயிருக்கிறார்.அவர் தம்முடைய வார்த்தையை ஆதரிக்கவில்லையென்றால், அப்பொழுது அவர் தேவனல்ல, இல்லையென்றால் ஒன்று அது அவருடைய வார்த்தையல்ல. ஆனால் அவர் தம்முடைய வார்த்தையைக் குறித்து கவனமுள்ளவராயிருப்பார்.
173. இப்பொழுது நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு சற்றுமுன், நாம் இந்தப் பழைய நல்ல பாடலைப் பாடுவோமாக. ஜனங்களே நீங்கள் எல்லோருமாய், நீங்கள் எல்லோருமாய் சேர்ந்துப் பாடுங்கள்.
நான் அவரை ஸ்தோத்தரிப்பேன், நான் அவரை ஸ்தோத்தரிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவரை ஸ்தோத்தரிப்பேன்; ஜனங்களே நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், அவருடைய இரத்தமே ஒவ்வொரு கரையையும் போக்கிற்று.
174. சகோதரியே நீங்கள் எங்களுக்கு சுருதி கொடுப்பீர்களா? இப்பொழுது ஒவ்வொருவரும், எல்லோருமாகச் சேர்ந்து, எல்லோருமே பாடுவோமே!
நான் அவரை ஸ்தோத்தரிப்பேன், நான் அவரை ஸ்தோத்தரிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவரை ஸ்தோத்தரிப்பேன்; ஜனங்களே நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், அவருடைய இரத்தமே ஒவ்வொரு கரையையும் போக்கிற்று.
175. நான் வியப்புறுகிறேன். இது பரிசுத்தக் குலைச்சலாய் இருக்காது. இது அப்படியே வெளிப்படுத்திக் கூறுவதாயுள்ளது. பிள்ளைகளே, நாம் பிள்ளைகளாயிருக்கிறோம். நீங்கள் உங்களைத் தேவனுக்குள்ளாக வளர்ந்தவர்களாக எண்ணிக்கொள்ளும்போது, நீங்கள் எங்கிருந்தும் எதையுமே பெற்றிருக்கவில்லை என்பதையே அது காண்பிக்கிறது. எனவே எப்பொழுதுமே ஒரு குழந்தையாயிருங்கள், அப்பொழுது அவரால் உங்களை வழிநடத்த முடியும். ஆனால் நீங்கள் அவரைக்காட்டிலும் அதிகமாக அறிந்தவர்களாயிருப்பது போன்றிருக்கும்போது, நீங்கள் அவரை வழிநடத்த முயற்சிக்கிறீர்கள். புரிகின்றதா? அவரே வழிநடத்தட்டும். நாம் நம்முடைய கண்களை மூடி, நம்முடைய கரங்களைக் உயர்த்தி, நம்முடையத் தலைகளைத் தாழ்த்தி, அதை இன்னும் ஒருவிசைப் பாடுவோமாக. நான் அவரை ஸ்தோத்தரிப்பேன், நான் அவரை ஸ்தோத்தரிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவரை ஸ்தோத்தரிப்பேன்; ஜனங்களே நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், அவருடைய இரத்தமே ஒவ்வொரு கரையையும் போக்கிற்று. பெத்லகேமினுடைய முன்னணையிலிருந்து அந்நியர் ஒருவர் வந்தார், புவியில் நான் அவரைப் போன்றிருக்கவே வாஞ்சிக்கிறேன்; ஜீவிய யாத்திரை முழுவதிலும் புவியிலிருந்து மகிமை வரையிலும் நான் அவரைப் போலிருக்க மாத்திரமே வேண்டுகிறேன்.
176. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள் ".
177. அவர் அந்த பெரும்பாடுள்ள ஸ்திரீயினிடத்தில் கூறினபோது, நீங்கள் அங்கே நின்றுகொண்டிருந்திருக்க வேண்டும் என்று விரும்பவில்லையா? அவள் கூட்டத்தாரினூடாக நெளிந்து வந்து, அவருடைய வஸ்திரத்தை அவள் தொட்டு, "அவள் தனக்குள்ளே, அது தேவகுமாரன், நான் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டால் நலமாயிருக்குமே!'' என்று கூறிக்கொண்டாள். இப்பொழுது, பாலஸ்தீன வஸ்திரமோ தளர்ந்து கீழே தொங்கிக் கொண்டிருந்த வஸ்திரமாயிருந்தது. அவளோ.... அவர் அந்தத் தொடுதலை ஒருபோதும் உணரவில்லை, ஏனென்றால் அவர் அதை நிருபித்தார். அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். பின்பு அவள் கூட்டத்தாரிலிருந்து விரைந்து திரும்பிச் சென்றுவிட்டாள்.
178. அப்பொழுது இயேசுவோ நின்று., "என்னைத் தொட்டது யார்? யார் என்னைத் தொட்டது?” என்று கேட்டார்.
179. அதற்குப் பேதுருவோ அவரிடத்தில், "ஆண்டவரே, எல்லோரும் உம்மைத் தொட்டுக்கொண்டும், உம்முடையக் கரங்களைக் குலுக்கிக்கொண்டும், உம்மைத் தட்டிக்கொடுத்துக் கொண்டும் மற்றும் எல்லாவற்றையுமே செய்து கொண்டுமிருக்கிறார்களே. ஒவ்வொருவரும் உம்மைத் தொட்டார்களே, அப்படியிருக்க நீர் அதைப்போன்ற இப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஏன் கூறுகிறீர்?” என்று கடிந்து கொண்டான்.
180. அப்பொழுது அவரோ, "ஆயினும் நான் பலவீனமடைந்துள்ளேன். வல்லமை என்னிடத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. யாரோ என்னைத் தொட்டார்கள்” என்றார்.
181. அவர் சுற்றும் முற்றும் கூட்டத்தாரை நோக்கிப் பார்த்தபோது, அவர் அவளைக் கண்டார். அப்பொழுது அவள் பெரும்பாடுள்ள ஸ்திரீயாய் இருந்து வந்திருந்தாள் என்றும், அவளுடைய விசுவாசமே அவளை குணமாக்கியிருந்தது என்றும் அவர் அவளிடத்தில் கூறினார்.
182. அதைப்போன்றிருக்க நீங்கள் விரும்பமாட்டீர்களா? இதைவிட மகத்தானதாய் வேறெந்தக் காரியத்தைக் குறித்துமே சிந்தித்துப்பார்க்க முடியாதல்லவா?
183. ஒரு மனிதன் அவரிடத்தில் நடந்து சென்றான். அப்பொழுது அவர், "உன்னுடையப் பெயர் சீமோன். உன்னுடையத் தகப்பனாரின் பெயரோ யோனா” என்றார். ஓ!
நான் அவரை..... போலிருக்க மட்டுமே வேண்டுகிறேன்.
184. அது முடியுமா? அவர், “நான் செய்கிற இந்தக் காரியங்களையே! இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம்.......” என்றார். இப்பொழுது அங்கே உலகம் என்பது கிரேக்க வார்த்தையில் காஸ்மாஸ் என்று உள்ளது. அது “உலக ஒழுங்கு” என்ற பொருள்படுகிறதேயன்றி, பூமி என்றல்ல, “உலக ஒழுங்கு” ஆகும். “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்," அது விசுவாசியாகும், “ஏனென்றால் நான்,” நான் என்பது ஒரு தனிப்பட்ட பிரதிப் பெயர்ச்சொல், “நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் செய்கிறக் கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவைகளைப் பார்க்கிலும் அதிகக் கிரியைகளையும் செய்வீர்கள்.” ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வீகமான வாக்குத்தத்தங்கள் தவறிப் போக முடியாது. இயேசு, “எந்த வேத வாக்கியமும் தவறிப்போக முடியாது” என்றார்.
ஆகையால் இயேசுவைப் போலிருக்க (அவர் இங்கிருக்கிறாரா?) இயேசு, (இப்பொழுது ஆராதிக்கும் மனப்பான்மையில் அப்படியே இருங்கள்.) புவியிலே நான் அவரைப் பேன்றிருக்கவே வாஞ்சிக்கிறேன்; ஜீவிய யாத்திரை முழுவதிலும் புவியிலிருந்து மகிமை வரையிலும், நான்....... போன்றிருக்க மாத்திரமே வேண்டுகிறேன்.
185. கலிலேயாவில் அவர் நடப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அங்கிருந்த அந்தப் பரிசேயர்களோத் தங்களுடைய இருதயத்தில், "அவர் பெயல்செபூலாய் இருக்கிறார்'' என்றனர். அவர்கள் அதை வெளியே சத்தமாக ஒருபோதும் கூறவில்லை, ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொண்டார். வேதவாக்கியங்கள் அதைக் கூறுகின்றனவா? அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்திருந்தார்.
186. அவர், “நீங்கள் அதை எனக்கு விரோதமாகப் பேசுகிறீர்கள். நான் உங்களை மன்னிப்பேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதேக் காரியங்களைச் செய்யும் ஒரு நேரம் வரும். அப்பொழுது அதற்கு விரோதமாய் பேசாதீர்கள்” என்றார்.
187. அப்படியே இயேசுவைப் போன்றிருக்கவே! இக்காலையில் இந்தச் சிறு கூட்டத்தில் எத்தனைபேர் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்றும், அவர் இன்றைக்கு ஜீவிக்கிறார் என்றும், அவர் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் காத்துக்கொள்ள மாறாதவராயிருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்!” என்கிறார்கள். - ஆசி.] உங்களுக்கு நன்றி. அதுவே அவருடையப் பிரசன்னத்தைக் கொண்டுவருகிறது.
188. நான் நின்றுகொண்டிருப்பதற்கு மேலாக அங்கே உள்ள கர்த்தருடையத் தூதனின் புகைப்படத்தை உங்களில் அநேகர் அறிவீர்கள். நாம் அப்புகைப்படங்களை ஜெர்மனியில் உள்ள சுவிட்சர்லாந்தில் எடுத்தோம். அவர்களோ அவைகளை எங்கும் கொண்டு செல்கின்றனர். அன்றொரு நாள் அவர்கள் ஒரு புகைப்படத்தை எடுத்தனர். அது நான் இதுவரைக் கண்டதிலேயே மிக முக்கியமானதாயுள்ளது. நான் அடுத்த முறை திரும்பி வரும்போது, நான் அதை சபைக்கு காட்டும்படி கொண்டு வருவேன். அதில் எப்படி எல்லை கடந்த கதிர் ஒளி போன்றவை விழுந்துள்ளது என்பதைக் காணும்படியாகவும், அது இருமுறை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதிக்கும்படியாகவும் தேசிய ஆய்வு அதிகாரிகளிடத்தில் இப்பொழுது உள்ளது. அது....... தூதனுடைய ...... அவர் என்னை சந்தித்தது முதற்கொண்டு நான் பெற்று வந்துள்ள மகத்தான ஆறுதலாய் உள்ளது; நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்துள்ளோம்.
189. நான் ஒரு மனிதனாயிருக்கிறேன். எனவே ஒரு மனிதனுக்குள் எந்த நல்ல காரியமும் கிடையாது. ஆனால் ஒரு மனிதன் தன்னுடைய இருதயத்தைத் திறக்க முடிந்தால், தேவன் அவனை சுத்திகரிக்க அனுமதித்தால், அப்பொழுது இது....... இல்லை.... தேவன் கரங்களை உடையவராயிருக்கிறார். அவைகள் உங்களுடையக் கரங்களும், என்னுடையக் கரங்களுமாயிருக்கின்றன. அவருடையக் கண்கள் என்னுடையக் கண்களும், உங்களுடையக் கண்களுமாய் இருக்கின்றன, ஏனென்றால் அவர் ஆவியாயிருக்கிறார். ஆனால் அவர் தம்முடையச் சித்தத்தைச் செய்ய, வெளிப்படுத்த நமது மூலம் கிரியைச் செய்ய முடியும்.
190. நான் இங்கே ஒரு ஜெப வரிசையை அழைக்கப் போகிறேன். நான் என்னுடைய மனதை மாற்றிக்கொண்டேன். தேவனாகியக் கர்த்தருடையப் பிரசன்னம் இங்குள்ளது என்பதை நான் விசுவாசிக்கிறேன். அவர் இதற்கு முன்பு இங்கே இருந்தபோது அவர் செய்த அதேக் காரியத்தை இப்பொழுது அவரால் செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன், இல்லையென்றால் அவர் தேவனல்ல. எத்தனை..... ஜனங்கள்........
191. நான் இங்கே அநேக முகங்களை அறியாமலிருக்கிறேன். நான் இங்கு இல்லாமலிருக்கும்போது கூட உங்களில் அநேகர் இங்கே சபைக்கு வந்திருக்கலாம், எனவே நான் உங்களை அறியேன். ஆனால் இங்கே எத்தனைபேர் தேவையுள்ளவர்களயிருக்கிறீர்கள்? நான் உங்களை அறியேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், அப்படியானால் உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள்; கட்டிடத்தில் உள்ள எல்லோருமே என்பதை அறிந்துகொள்கிறோம். இங்கே முக்கியமாக முன்னால் உள்ளவர்கள், இங்கே முன்னால் அழகாக அமர்ந்துள்ள ஒவ்வொருவருமே முற்றிலும் அந்நியர்களாயிருக்கிறார்கள்.
192. ஆகையால் இயேசுவானவர் ஜீவிப்பாரேயானால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். உங்களுக்கு எந்தக் காரியமாவது தேவையாயிருக்குமாயின், வேதம் கூறுகிறது.... இப்பொழுது, பழைய ஏற்பாட்டில் அல்ல; புதிய ஏற்பாட்டிலேயே! புதிய ஏற்பாட்டில் உள்ள எபிரேயரின் புத்தகத்தில், “இயேசு கிறிஸ்து இப்பொழுது பிரதான ஆசாரியராய் இருக்கிறார்” என்று கூறியுள்ளது. ஒரு பிரதான ஆசாரியன் என்றால் என்ன என்று எவரேனும் அறிவீர்களா? “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக் கூடிய ஒரு பிரதான ஆசாரியன்.” ஒரு பிரதான ஆசாரியன் தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்ய வேண்டியவராயிருக்கிறார். இயேசுவானவர் வேண்டுதல் செய்யும்படிக்கு ஒரு பிரதான ஆசாரியனாய் நிற்கிறார். அவர் நம்முடைய பலவீனங்களைக்குறித்து பரிதபிக்கக் கூடியவராயிருக்கிறார். இப்பொழுது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரேயானால்; ஒரு ஸ்திரீ அங்கே அவருக்குப் பின்னால் தொட்டபோது, அவர் திரும்பி சுற்றிப் பார்த்து அவளைக் கூறிவிட்டார்; குருடனான பர்திமேயு அவர் இருந்த இடத்திற்கு முந்நூறு கெஜ தூரத்தில் உள்ள வாசலில் நின்று, “எனக்கு இரங்கும்" என்று கூச்சலிட்டான்.
193. அவர் கடந்து சென்றபோது, அவருடையத் தலை கல்வாரியை நோக்கியதாயிருக்க, பலியாகச் செலுத்தப்பட எருசலேமுக்கு சென்று கொண்டிருக்கையில் ஜனங்களோ அவரைக் குறித்து பரியாசம் பண்ணினார்கள். அந்த ஆசாரியர்களும், “மரித்தோரை உயிரோடெழுப்பினவரே”, என்று கூறி, “நாங்கள் கல்லறைத் தோட்டம் முழுவதுமே மரித்தோரை வைத்துள்ளோம், நீர் வந்து அவர்களை எழுப்பும். அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம்" என்று கூறிக்கொண்டிருந்தனர். அதேக் கூட்டத்தார், “சிலுவையிலிருந்து இறங்கி வா, (நீர் தேவ குமாரனாயிருக்கிறீரே!) அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம்” என்று கூறினர்.
194. அந்தக் குறை கூறுபவர்களைப் பார்த்தீர்களா? அவர்கள் எப்பொழுதுமே அந்தக் குறை கூறுபவர்களை வைத்திருந்தனர். அந்த வகுப்பினரோடு சேராதீர்கள், அந்தவிதமானப் பிரிவினரோடு உங்களுக்கு பங்கு வேண்டாம். தேவன் அதை தடை செய்வாராக! நீங்கள் தேவனைக் காணும்படியாகவும், அவரை அறிந்துகொள்ளும்படியாகவும் உங்களுடைய இருதயத்தில் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.
195. ஆனால் இந்த ஏழையான, வயோதிக குருட்டுப் பிச்சைக்காரன் அங்கே நின்றுகொண்டு, “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்'' என்று கூப்பிட்டான். அவனுடைய விசுவாசம் இயேசுவை நிறுத்தியது. அப்பொழுது இயேசு திரும்பி அவனை கண்டறியும்படியாய்க் சுற்றிப் பார்த்து, அவன் தன்னுடையப் பார்வையைப் பெற்றுக்கொள்வான் என்று அவனிடத்தில் கூறினார்.
196. அந்த மாறாத இயேசு ஜீவிக்கிறாரே!......... அவர் இன்றைக்கும் மாறாத அதே தேவனாயில்லாமலிருந்தால்.... அவர் அவ்வாறில்லையென்றால்.... அப்பொழுது ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவனால் என்ன நன்மை உள்ளது?
197. குளிராயுள்ள ஒரு மனிதனை கதகதப்பாக்க வரைந்து வண்ணந்தீட்டப்பட்ட ஓர் அக்கினிப் படத்தை அவனுக்கு சுட்டிக்காட்ட முயற்சிப்பது என்ன நன்மையைச் செய்கிறது? வண்ணந்தீட்டப்பட்ட அக்கினியோ...... உபயோகமாயிராது. அது ஒரு சரித்திரப்பிரகாரமான அக்கினியாயுள்ளது. நீங்களோ, "அது ஒரு வண்ணந்தீட்டப்பட்ட அக்கினி அல்ல, சகோதரன் பிரான்ஹாம் அது உண்மையாக நிகழ்ந்த ஓர் அக்கினியைப் பற்றிய ஒரு படமாயிருக்கிறது” என்று கூறலாம். உங்களால் அந்தப் புகைப்படத்தின் மூலம் கதகதப்பான நிலையை அடையவே முடியாது. அது ஏற்கெனவே இருந்த ஏதோ ஒரு காரியமாயுள்ளது. இப்பொழுது அதைக் குறித்து என்ன?
198. அவர் நேற்றும், என்றும், இல்லை ..... அவர் இன்றும் இல்லை அவர் மாறாத தேவனாயிருக்கிறாரல்லவா! நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? [சபையேர், “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.)
199. இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையாகவே பயபக்தியோடிருங்கள். அது நான் பேசுவதாய் இருக்க வேண்டுமானால், உங்களைக் குறித்து அறிந்துகொள்ள எனக்கு வழியேக் கிடையாது. தேவன் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். ஆனால் இயேசுவானவர் வந்து என்னுடைய சரீரத்தை அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக் கொள்வாரேயானால், கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளுவாரேயானால்.... அவர் என்னுடைய சரீரத்தை எவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது முக்கியமல்ல, அவர் உங்களையுங்கூட கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் பிரயோஜனமில்லை. நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். ஏனெனில் அது நீங்கள் விசுவாசிப்பதை மாத்திரமே பொறுத்ததாயுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசு வந்து அதைச் செய்வாரேயானால், அப்பொழுது நீங்கள் அவருடைய வஸ்திரத்தைத்தொட்டு, "கர்த்தாவே, நான் தேவையுள்ளவனாயிருக்கிறேன். கர்த்தாவே, நான் உம்மைத் தொடட்டும்” என்று கூறுங்கள்.
200. அப்பொழுது நீங்கள் அவரைத் தொட்டால், அவர் மாறாதப் பிரதான ஆசாரியராயிருந்தால், அப்பொழுது அவர் இங்கே பூமியில் இருந்தபோது அவர் செய்தவிதமாகவே செயல்படுவார். அது சரிதானே? [சபையோர் "ஆமென்” என்கிறார்கள் - ஆசி.) அது மற்ற வேறெந்த வழியிலாவது செயல்படுமானால், அப்பொழுது அது தவறானக் காரியமாயுள்ளது. நீங்கள் தவறானக் காரியத்தைத் தொட்டுவிட்டீர்கள். அது ஒரேவிதமாக இருக்க வேண்டும், ஒரேவிதமான வழியில் செயல்பட வேண்டும். அப்படியானால் அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டது போல, உங்களால் அவருடைய வஸ்திரத்தைத் தொடமுடிந்தால், அப்பொழுது அவர் அதேக் காரியத்தைச் செய்யமாட்டாரா?
201. அது சம்பவிக்கக் கூடுமானால், நான்...... ஆகையால் நீங்கள் அதை அறிந்துகொள்ளும்படியாக, அது இந்தச் சபைக்கு வருகிற ஜனங்களாகிய உங்களில் சிலராய் இருந்தால்...... நான் - நான் உங்களிடத்தில் எதையுமே சொல்லமாட்டேன். அது உங்களுடைய விசுவாசத்தின்படியாய் இருக்க வேண்டியதாயிருக்கும், ஏனென்றால் இதுவோ - இது...... நான்... எனக்கு அந்நியர்களே தேவை. கர்த்தருக்குச் சித்தமானால், இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் உங்களை அழைப்பேன். எனக்குத் தேவையோ...... நான் உங்களுக்காக ஜெபிக்க இங்கே மேடையண்டை உங்களை மேலே கொண்டு வருவேன்
202. இந்தப் பட்டணத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ள அந்நியர்களே எனக்கு வேண்டும். நீங்கள் பட்டிணத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ள ஜனங்களாய் இருந்தால், நீங்கள் இங்கே உணவக விடுதியிலும், சாலையோர உணவு விடுதியிலும் தங்கி காத்திருப்போராயிருந்தால் நலமாயிருக்கும். நிச்சயமாகவே, அந்தவிதமாக உலகம் முழுவதிலுமிருந்து வருகிறார்கள். அவர்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள். அவர்கள் அவரை விசுவாசிக்கிறார்கள். இந்தக் கடைசி நாட்களில் அவர் அதைச் செய்ய வேண்டியவராய் இருக்கிறார் என்று அவர்கள் வேதத்தில் வாசிக்கிறார்கள்.
203. இயேசு, “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்." என்றார். உங்களால் வரமுடியாது, தேவன் உங்களை இழுத்துக் கொண்டாலொழிய, எந்தக் காரியத்தையுமே செய்ய முயற்சிக்க வேண்டியதில்லை. தேவன் உங்களை இழுத்துக்கொள்ளும்போது, அப்பொழுதே நீங்கள் வருவீர்கள். “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.'
204. இப்பொழுது நீங்கள் விசுவாசமுடையவர்களாய் இருங்கள், அப்படியே அமைதியாய் சற்று நேரம் அமர்ந்திருங்கள். உங்களுடையக் கவனத்தைத் தேவனுக்குத் தாருங்கள். அதாவது நீங்கள், “தேவனாகிய கர்த்தாவே, நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொட்டும். நான் வியாதியாயிருக்கிறேன். நான் தேவையுள்ளவனாயிருக்கிறேன். எனக்குத் தேவை உண்டு. சகோதரன் பிரான்ஹாம் என்னை அறிந்திருக்கவில்லை, இதுவே நான் முதன்முறையாக அந்த மனிதனைக் கண்டிருப்பதாகும். ஆனால் நீர் இன்னமும் யேகோவாவாக இருக்கிறீர் என்றும், நீர் அவர் பேசுகிற இயேசுவாய் இன்னமும் இருக்கிறீர் என்றும் நான் எனக்கே நிரூபித்துக்கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு இந்த விளங்காத ஒளியைக் குறித்த ஒரு பேச்சு உலகத்தில் உள்ளது என்று நான் நம்புகிறேன். அது நீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீரே என்னை இங்கு வழிநடத்தின அந்த மாறாத ஒருவராயிருக்கிறீர். இப்பொழுது நான் என்னக் கண்டடைவேன்? கர்த்தாவே, நான் அவரை, அவர்கள் கண்டறிந்த அதே இயேசுவை கண்டடைவேனாக. நான் அவரைக் கண்டறியட்டும்” என்று கூறி ஜெபியுங்கள். இப்பொழுது கூர்ந்து கவனித்து, எதிர்நோக்கியிருங்கள்.
205. தேவன் அதை வெளிப்படுத்தும் வரையில், அதை அறிந்து கொள்ளுவதற்குரிய வழியே எனக்குக் கிடையாது. தேவன் அதை வெளிப்படுத்துகிறபோது, அப்பொழுது அதுவோ தேவன் அதை செய்கிறதாயுள்ளது, நானல்ல. எனவே அவர் அதைச் செய்வாரானால், எத்தனைபேர் விசுவாசிப்பீர்கள்? நான் அவர் பேரில் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள். நீங்களோ, “நான் அதை விசுவாசிப்பேன். ஆம் ஐயா. நான் என் முழு இருதயத்தோடு அதை விசுவாசிப்பேன்” என்றுக் கூறுங்கள். சரி.
206. இப்பொழுது நீங்கள் நோக்கிப் பார்த்து ஜெபிக்கும்போது உங்களுடையத் தலைகளை உயர்த்துங்கள். இப்பொழுது உண்மையாகவே இந்தப் பாடலை மென்மையாய் பாடுங்கள். நான் முதன்முதலில் இந்தப் பாடலை வாசிக்கக் கேட்டிருந்த அந்தப் பண்டைய இசைப் பேழை இதோ உள்ளது.
நம்பிடுவாய்..........
207. இயேசுவானவர் மலையிலிருந்து இறங்கி வந்தபோது, அவருடைய சீஷர்களோ ஒரு சந்திரரோகி நோயினைக் குணப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருந்தபோதிலும் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே அவர்கள் அதனை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அப்பொழுது அவர், “நீ விசுவாசித்தால், என்னால் சுகப்படுத்த முடியும், ஏனென்றால் விசுவாசிக்கிறவர்களுக்கு யாவும் கைக்கூடும். விசுவாசிக்க மட்டுமே செய்” என்றார்.
208. ஒவ்வொருவரும் உங்களால் முடிந்தளவு பயபக்தியோடிருங்கள். பேதுருவும் யோவானும், “எங்களை நோக்கிப்பார்” என்று கூறினவிதமாக, அப்படியே இந்தவிதமாய் நோக்கிப் பாருங்கள். ஏதோ ஒரு காரியத்திற்காக அவர்களை நோக்கிப்பார்பதல்ல, ஆனால் கவனம் செலுத்தும்படி நோக்கிப்பார்த்தல். மேலும், “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை” என்றான்.
209. பரலோகத்தின் தேவன் அதை அருளுவாராக. பாருங்கள், அவருடைய வார்த்தை கழுமரத்தில் உள்ளது, என்னிடத்தில் அல்ல. நான் அதைப் பிரசங்கிப்பதற்கான உத்திராவதமுள்ளவனாயிருக்கிறேன்.
210. அது கடினமாயுள்ளது, இது என்னுடைய சொந்த ஊராகும். இயேசு கூறினதை நீங்கள் அறிவீர்கள். அவர் தம்முடைய சொந்த ஊருக்குச் சென்றபோது, அவரால் அநேக அற்புதங்களைச் செய்ய முடியவில்லை. நீங்கள் எல்லோருமே அதை அறிவீர்கள். அப்பொழுது இயேசு நின்று, "தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் ” என்றுக் கூறினார். அது இன்னமும் இன்றைக்கும் அதேவிதமாகவே உள்ளது.
211. ஆனால் இங்கே அநேகர் சொந்த ஊரிலிருந்து வந்திராதவர்களாயிருக்கிறீர்கள். [சகோதரன் பிரான் ஹாம் இருபத்தைந்து விநாடிகள் நிறுத்துகிறார் - ஆசி.)
212. ஐயா, சரியாக அங்கே வரிசையின் கடைசியில் மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு என்னை நோக்கிப்பார்த்துக் கொண்டிருப்பவரே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். தேவன் நம்மை அறிந்திருக்கிறார். ஆனால் நீர் விளங்காத ஏதோ ஒன்று சம்பவித்துக்கொண்டிருக்கிறது என்ற உணர்வுடையவராய் இருக்கிறீர். நான் காண்கிறதை உங்களால் காணமுடிந்தால் நலமாயிருக்கும், உங்களுக்கு மேலே அந்த ஒளி உள்ளது. தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால் நலமாயிருக்கும். இப்பொழுது நீங்கள் அவரோடுத் தொடர்புக் கொண்டிருக்கிறீர்கள். அவர் என்னுடையச் சத்தத்தையும், என்னுடையக் கண்களையும் உபயோகிக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஏதோ ஒரு காரியம் தேவையுள்ளவர்களாயிருக்கிறீர்கள். எனக்கு உங்களைத் தெரியாது. உங்களைக் குறித்த எந்தக் காரியமும் எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஐயா, அது உண்மையானால், உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள்.
213. ஆனால் நீங்கள் உண்மையாகவே ஓர் இனிமையான, தாழ்மையைப் போன்ற உணர்வை உங்கள் மேல் பெற்றிருப்பதாக இப்பொழுது உணருகிறீர்கள். (அது சரிதானே?) அது கர்த்தருடையத் தூதனாயிருக்கிறது. அது உங்களுக்கு மேலே உள்ளது. தேவன் அவருடையக் குமாரன் கர்த்தராகிய இயேசுவின் மூலம் வெளிப்படுத்தினது போலவே, அவர் என்னிடத்தில் உங்களுடையத் தொல்லை என்னவென்பதை வெளிப்படுத்துவாரேயானால் நலமாயிருக்கும். அவர் என்னுடைய இருதயத்தைப் பரிசுத்தப்படுத்தும் படியாகவும், உங்களிடத்தில் திரும்பிப் பேசும்படியாக ஜீவிக்கவுமே இங்கு வந்தார். நீங்கள் அதே பிரதான ஆசாரியரையே தொட்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் ஏதோ ஒன்றோடு தொடர்புக் கொண்டிருக்கிறீர்கள். அது அவராயுள்ளது.
214. உங்களுடையத் தொல்லை உங்களுடைய நுரையீரல்களில் உள்ளது. அது உண்மை . உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். அது நீங்கள் வேலை செய்ய முடியாதபடி மிகவும் மோசமாக உள்ளது. அது உண்மை. உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். நான் உங்களை அறியேன்.
215. இப்பொழுது எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? இங்கே நோக்கிப் பாருங்கள். நான் அதை யூகித்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். அந்த ஆவி இன்னமும் அந்த மனிதன்மேல் உள்ளது.
216. பரலோகத்தின் தேவன் உங்களை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவருக்கு சேவை செய்கிறீர்களா? நீங்கள் அவருக்கு சேவை செய்கிறீர்கள் என்றே நான் கூறுகிறேன். [“அது சரியே.'' - ஆசி.] ஆம் ஐயா. நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். [” ஆமென்”] நீங்கள் குணமாக்கப்படுவதற்காகவே இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் சுகத்தோடு வீட்டிற்குச் செல்லப் போகிறீர்கள். உங்களுடையப் பெயர் திரு. ரானி. அது முற்றிலும் உண்மை . அது உண்மையானால் உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் வீட்டிற்குத் திரும்பிப் போகலாம். ஐயா, நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள். உங்களுடைய விசுவாசமே உங்களை குணமாக்கிற்று. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
217. நான் இந்த மனிதனை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை, இதோ என்னுடையக் கரங்கள் உள்ளன, இதுவே ஒருவேளை நம்முடைய முதன் முறையான சந்திப்பாயிருக்கலாம். அது தேவனாயிருக்கிறது. இப்பொழுது அப்படியே அமர்ந்திருங்கள். ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். அதைச் செய்கிற ஏதோ ஒரு காரியம் இங்கே உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்.
218. இப்பொழுது, பரிசேயர்களோ, “அவர் பிசாசாய் இருக்கிறார்” என்றனர். அப்பொழுதே அவர்கள் பிசாசினுடையப் பலனைப் பெற்றுக்கொண்டார்கள்.
பிலிப்பு, “அது தேவனுடைய குமாரன்" என்றான். அவன் அவருடையப் பலனைப் பெற்றுக்கொண்டான்.
நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்களோ, அது உங்களைப் பொறுத்ததாயுள்ளது.
219. நீங்கள் அங்கே அழுதுகொண்டிருந்தீர்கள். ஏதோ ஒன்று உங்களைத் தாக்கினது என்ற உணர்வுள்ளவராகவே நீர் இருந்தீர். நீர் அவ்வாறிருந்தீரல்லவா? அது உண்மையானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அழுதுகொண்டிருந்த அந்த மனிதன் இங்கே உட்கார்ந்திருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். (அந்த சகோதரன், “அது உண்மை ” என்கிறார் - ஆசி.) நான் உங்களை அறியேன். ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். உங்களுடையத் தொல்லை என்னவென்பதைத் தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசித்தால், உங்களுடையக் கரத்தை முன்னும் பின்னுமாக அசைத்துக் காட்டுங்கள். சரி.
220. நீங்கள் வயிற்றுக் கோளாறினால் அவதியுறுகிறீர்கள். அது உண்மை . தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிந்துள்ளார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை அவர் எனக்குக் கூறுவாரேயானால், அது உங்களைப் பலப்படுத்துமா? நீங்கள் அதை விசுவாசித்தால், உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள், அதை முன்னும் பின்னுமாக அசைத்துக் காட்டுங்கள். சரி. அது உங்களைப் பலப்படுத்துமா? திரு. ஃபிரட் மோர். அது முற்றிலும் உண்மை . திருவாளரே, உங்களுடைய வயிற்றில் உள்ள சிறுகுடல் முகப்பு வீக்கத்தில் உள்ள அந்த சீழ்ப்புண் உங்களைவிட்டுப் போயிற்று, வீட்டிற்குச் செல்லுங்கள். ஒரு நரம்பு தளர்ச்சி நிலையே அது உண்டாகக் காரணமாயிருந்தது, ஆனால் அவர் உங்களை அங்கே தொட்டபோது இயேசு கிறிஸ்து உங்களை குணப்படுத்திவிட்டார்.
221. அங்கே உங்களுக்கு அடுத்துள்ள அந்தப் பெண்மணி, ஓ, அது யார் என்பதை நான் அறிவேன். நான் அந்த ஸ்திரீயை அறிவேன், அவளுடையப் பெயர்...... நான் தவறாக அறிந்துகொண்டிருக்கவில்லை. அது திருமதி. கிரீனி என்று நான் நினைக்கிறேன், அதுதானே? சகோதரி கிரீனி அவர்களே, என்னால் உங்களை அழைக்கமுடியாது, ஏனென்றால் நான் உங்களை அறிவேன். ஆனால் இங்கே ஒரு நிமிடம் பொறுங்கள். இல்லை, அது உங்களுக்காக அல்ல. நீங்கள் யாரோ ஒருவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. அந்த நபர் இங்கிருந்து தூரமாக ஒரு பெரிய தேசத்தில் இருக்கிறார், அங்கே அதிகமாய் பனிமழை பெய்துகொண்டிருக்கிறது. அது நெப்ராஸ்கா என்ற இடமாய் உள்ளது. நீங்கள் புற்றுநோயோடு உள்ள ஒரு பெண்மணிக்காகவே ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள் அது உண்மையானால், உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். நெப்ராஸ்கா என்ற இடத்தில் புற்று நோயோடுள்ள ஒரு நபருக்காகவே நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
விசுவாசமுள்ளவர்களாயிருங்கள், விசுவாசியுங்கள்.
222. அங்கே அமர்ந்துள்ளப் பெண்மணி தன்னுடையக் கண்களிலிருந்து வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் ஓர் அந்நியராய் இருக்கிறாள். நான் அந்தப் பெண்மணியை அறியேன். அவளுக்குப் பக்கத்தில் அவளுடையக் கணவர் அமர்ந்துகொண்டிருக்கிறார்; பெரிய உருவங்கொண்ட மனிதர். அவர்கள் அந்நியர்களாயிருக்கிறார்களே!
223. தேவன் ஜெபத்திற்கு செவிக்கொடுக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பெண்மணியே, இது தேவனுடைய ஆவியாய் இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் மரணத்திற்கேதுவாய் நிழலிடப்பட்டிருக்கிறீர்கள், இல்லையா? அது ஒரு புற்றுநோய். நாம் அந்நியர். உங்களுடையக் கரத்தைப் பின்னாலிருந்து அசைத்துக் காட்டுங்கள். அது உண்மை. என்னுடைய ஜீவியத்தில் நான் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. நீங்கள் இந்தப் பட்டிணத்திலிருந்து வரவில்லை, நீங்கள் எங்கிருந்தோ ஆற்றைக் கடந்து வந்திருக்கிறீர்கள். அது உண்மை . உங்களடையப் பெயர் திருமதி. சாண்டர்ஸ் என்பதாகும். அது உண்மை . ஹில்டா என்பது உங்களுடைய முதல் பெயர். அது முற்றிலும் உண்மை . பெண்மணியே, உங்களுடையக் காலூன்றி எழும்பி நின்று, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து வரும் உங்களுடையச் சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பார்த்தீர்களா?
224. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். இங்கே கிட்டத்தட்ட இந்த வரிசைகளில் உள்ள நீங்கள் யாவரும் கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வையுங்கள், அப்பொழுது நீங்கள் குணமடைவீர்கள்.
225. இப்பொழுது, அது அவராகும். அது அவரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள் - ஆசி.) பாருங்கள், நான் உங்களை அறியேன். “நீங்கள் விசுவாசிக்கக் கூடுமேயானால் நலமாயிருக்குமே!" அது உங்களைப் பொறுத்ததாயுள்ளது.
226. ஐயா, நீர் இங்கே அமந்து ஜெபித்துக்கொண்டிருப்பது போன்று தென்படுகிறது. நீங்கள் என்னை அவருடையத் தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? அது அவராய் இருக்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஓர் அந்நியனாய் இருக்கிறேன். நீங்கள் எனக்கு அந்நியராய் இருக்கிறீர்கள். இதுவே நம்முடைய சந்திப்பின் நேரமாயுள்ளது. ஆனால் தேவன் நம்மிருவரையுமே அறிந்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அந்தக் காரியங்கள் உண்மையாயிருக்கின்றன. உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் உங்களுடைய முதுகுத் தொல்லையில்லாமல் வீட்டிற்குச் செல்லப்போகிறீர்கள் என்றும், தேவன் உங்களைச் சுகப்படுத்தப்போகிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஹாமில்டனில் உள்ள ஓஹையோவிற்கு திரும்பிச் செல்லுங்கள். அது உண்மை . உங்களுடையப் பெயர் திரு. பர்க்ஹார்ட். அது உண்மை . இயேசு கிறிஸ்து இப்பொழுது உங்களைக் குணப்படுத்திவிட்டார். எனவே நீங்கள் வீட்டிற்குச் சென்று சுகமாயிருக்கலாம். ஆமென். வேறு யாரேனுமிருந்தால் விசுவாசியுங்கள்.
227. ஓ, நீங்கள் அவருடையப் பிரசன்னத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாயிருக்கிறீர்களா? ஏதோ ஒன்று அதைச் செய்ய வேண்டியதாயுள்ளது என்று நீங்கள் தெளிவாக உணருகின்றீர்களா? அதைத்தான் அவர் முதலில் செய்தார் என்றும்........ வாக்களித்தார் என்றும் வேதம் கூறியுள்ளது. அவர் அதை யூதருக்கு முன்பாகவும், சமாரியருக்கு முன்பாகவும் செய்து, புறஜாதியார் முன்பாகவும் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார். இதுவே அந்த வேளையாயுள்ளது. ஏதோ ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவனல்ல; ஆனால் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளுகிற ஒரே தேவன் இப்பொழுது ஜீவித்துக்கொண்டிருக்கிறார். கர்த்தராகிய இயேசு, வியாதியஸ்தரைக் குணப்படுத்துகிற மாறாத ஒருவர், அவர் அதைச் செய்தவிதமாகவே, அதே முறையில் கடைசி நாட்களில் செய்வதாக வாக்குப்பண்ணினார். இதுவே மீண்டும் கிறிஸ்துமஸாய், அவருடைய வழிக்காட்டும் ஒளியாயுள்ளது. "சகோதரன் பிரான் ஹாம், நீர் எதைக் கவனித்துக்கொண்டிருக்கிறீர்?" நான் அவரை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அது மற்றொரு உலகமாய் உள்ளது. நீங்கள் அதைப் பெயரிட்டுக் கூற வேண்டுமானால், அது மற்றொரு பரிமாணமாய் உள்ளது. அது ஆவிக்குரிய உலகத்தில் உள்ளது.
228. நான் உண்மையாகவே இருதய பாரமடைந்துள்ள ஒரு மனிதனைக் காண்கிறேன், ஆனால் நான் அவரை அறிவேன். சகோதரன் ஃபங்க் அவர்களே இதுவரையிலும் நான் அதை அறிந்திருக்கவில்லை. நீங்கள் தொல்லையில் இருக்கிறீர்கள். உங்களுடையத் தாயார் மீது உண்மையாகவே ஒரு கருத்த நிழல் உள்ளது. நான் அதை அறியேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் இப்பொழுதுதான் உள்ளே வந்தேன். ஆனால் உங்களுடையத் தாயாருக்கு கடுந்தீங்கு விளைவிக்கிற புற்றுநோயினால் ஓர் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. நீர் தாயாரைக் குறித்து கவலையடைந்திருக்கிறீர். எனவே நீர் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர். உங்களுடையத் தந்தையாரை சரியான மனநிலைக்கு திரும்பக் கொண்டு வந்து அவருக்கு ஆரோக்கியத்தைத் திரும்ப அளித்த தேவனால் உங்களுடையத் தாயாருக்கும் திரும்ப சுகத்தை அளிக்க முடியும். பயப்படாதீர்கள். “நீர் விசுவாசிக்கக் கூடுமானால், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்"
229. அங்கே அவர் மற்றொரு நபர் மீது இருக்கிறார், ஆனால் நான் அவளை அறிவேன். ஆனாலும் அவள் வேறுயாரோ ஒருவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். திருமதி. ஆர்கன்பிரைட், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால், அப்பொழுது அந்தப் புற்றுநோய் குணமடைந்துவிடும். அது மற்ற யாரோ ஒரு நபராயுள்ளது. நீங்கள் விசுவாசியுங்கள்.
230. உங்களைக் குறித்து என்ன? பெண்மணியே, நீங்கள் என்னை அவருடையத் தீர்க்கதரிசி என்றும், அவருடைய ஊழியக்காரன் என்றும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அந்த ஸ்திரீ அவதியுற்றுக்கொண்டிருந்த அதே உதிரப்போக்கினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். சரியே. நீங்கள் இந்தப் பட்டிணத்திலிருந்து வரவில்லை. நீங்களும் கூட ஒஹையோவிலிருந்தே வந்திருக்கிறீர்கள். நீங்கள் என்னுடையக் கூட்டங்களில் ஒன்றில் உங்களுக்கிருந்த ஏதோ ஒன்றிலிருந்து குணமடைந்திருந்தீர்கள். உங்களுக்குப் புற்றுநோய் இருந்தது. நீங்கள் மரணத்திற்கேதுவான நிழலிடப்பட்டிருந்தீர்கள். அது இப்பொழுது போய்விட்டது. அது உண்மை. அதாவது நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகக் கூறுகிறேன். உங்களைப் போன்ற வயதிலுள்ளவர்களுக்கு உண்டாகும் உதிரப்போக்கு உள்ளது. ஆனால் உங்களுக்கு ஒரு வாதரோகமும் கூட உள்ளது, அல்லது மூட்டு வலியைப் போன்ற ஒன்று. அது நீங்கள் எழுந்திருக்கும்போது ஏற்படுகிறது. நீங்கள் காலையில் ஒரு விறைப்பான நிலையில் இருக்கிறீர்கள். உங்களுடையத் தொண்டையிலும் கூட உங்களுக்குத் தொல்லை உண்டு. நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா?
231. நீங்கள் உங்களுடைய இருதயத்தில் வேறுயாரோ ஒருவரை நினைத்து ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுடைய மருமகள். அவளுக்கு நரம்புப் புடைத்து வீக்கங்கொண்டுள்ளது. அவள் ஒரு பெருங்கூட்டப் பிள்ளைகளுக்குத் தாயாயிருக்கிறாள். அவள் அவ்வாறில்லையா? அது முற்றிலும் உண்மை. உங்களுடையப் பெயர் திருமதி. ஆலிஸ் தாம்ஸன். அது முற்றிலும் உண்மை . நீங்கள் வேண்டிக்கொண்டிருப்பதைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்லுங்கள். அவ்வண்ணமாகவே அவளும் குணமடைவாள், ஏனென்றால் நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்துள்ளீர்கள். இப்பொழுது நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறபடியால், இந்தவிதமாக உங்களுடையக் கரத்தை முன்னும் பின்னும் அசைத்துக் காட்டுகள், அசைத்துக் காட்டுங்கள். நான் உங்களை அறியேன், உங்களைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது.
232. நான் உங்களுடைய விசுவாசத்திற்கு சவாலிடுகிறேன். நான் இங்குள்ள எந்த நபரும் அவருடையப் பிரசன்னத்தில் விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளையிடுகிறேன். உங்களோடுள்ளக் கோளாறு என்னவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால் நலமாயிருக்கும்.
233. இது அவருடைய வருகைக்கு முன்பாக அவர் செய்யும் கடைசிக் காரியமாய் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் என்னக் கூறினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “சோதோம் கொமோராவின் நாட்களில் இருந்ததுபோலவே மனுஷகுமாரன் வருகையில் இருக்கும்.'' அப்பொழுது செய்தி என்னவாயிருந்தது?
234. மூன்று தூதர்கள் அங்கே புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் இருவர், ஒன்று பில்லிகிரகாம் மற்றொன்று ஜேக் சிஷ்ல்லர் (Jack Schiller) அவர்களும் சோதோமுக்குள் சென்று ஜனங்களுக்கு விடுதலையின் சுவிசேஷ செய்தியைப் பிரசங்கித்தனர். ஆனால் ஒரு தூதனோ தெரிந்துகொள்ளப்பட்ட ஆபிரகாமோடும், அவனுடையக் குழுவினரோடும் தங்கியிருந்தார்.
235. அந்தத் தூதன் தன்னுடைய முதுகைக் கூடாரப் பக்கமாகத் திருப்பியிருந்தார். சாராளோ கூடாரத்தின் உட்புறத்திலிருந்து நகைத்தாள். அப்பொழுது அந்தத் தூதன், “சாராள் ஏன் நகைத்தாள்?" என்று கேட்டார். அவருக்குப் பின்னால் இருந்த கூடாரத்திலிருந்து அவள் நகைத்ததை அவர் எப்படி அறிந்துகொண்டார்? அதுவே சோதோமின் அழிவிற்கு முன்னதாக இருந்த கடைசி செய்தியாயிருந்தது.
236. முழு அழிவிற்கு முன்பாகத் தேவன் காண்பிக்கும் கடைசி அடையாளங்கள் இதோ இருக்கின்றன. அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசித்து இரட்சிக்கப்படுங்கள்.
நாம் சற்றுநேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
237. அவருடையப் பிரசன்னத்தைக் குறித்த உணர்வுள்ளவர்களாய் நீங்கள் இருக்கிறீர்களா? இப்பொழுது அவர் உங்களுக்கு தேவைப்படுகிறாரா....... பின்னர் அவர்....... நீங்கள்.......... நான் உங்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்திருக்கிறேன். நீங்கள் அவருடைய செய்தியைக் கேட்டிருக்கிறீர்கள். அப்படியானால் அவர்தாமே இறங்கி வந்து பேசுவதை நீங்கள் காண்கிறீர்கள். ஒரு மனிதனால் எதை வேண்டுமானாலும் கூறமுடியும், ஆனால் தேவன் பேசி, அதை உறுதிபடுத்தினாலொழிய, அதனால் எந்த நன்மையும் இல்லை. ஆனால் அவர் வருகிறபோது, தேவன் செய்தியை உண்மையுள்ளதாக்கி மீண்டும் ஜீவிக்கச் செய்கிறார். அப்படியானால் அது தேவனாகும். நீங்கள் இப்பொழுது உங்களுடைய ஜீவியத்தின் முழு ஒப்புவிப்போடு அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் உங்களுடையக் கரங்களை ஒரு விநாடி உயர்த்தி, “நான் என்னுடைய கரங்களை உயர்த்தியுள்ளேன். நான் இப்பொழுதே என்னுடைய எல்லாவற்றையும், என்னுடைய எல்லாவற்றையும் அவருக்கு ஒப்புவிக்கிறேன்” என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
238. ஜெபத்திற்கான, சுகமளித்தலுக்கானத் தேவையுள்ள யாவரும், நீங்கள் ஒவ்வொருவரும் சுகமடைவீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்போமாக.
239. கர்த்தாவே, ஒருவரும் சுகமடையாதபடி விடப்படாமல், எல்லோரும் சுகத்தைப் பெற்றுக்கொள்வார்களாக. நாங்கள் உணர்வுள்ளவர்களாயிருக்கிறோம், கர்த்தாவே, நானோ....... இங்கு பலவீனமாய், நடுங்கிக்கொண்டு நிற்கிறேன். நீர் இங்கிருக்கிறீர். அது எந்த சந்தேகத்தின் நிழலுக்கும் அப்பாற்பட்டதாயுள்ளது. ஜனங்கள் தேவனுடையப் பரிசுத்தப் பிரசன்னத்தின் பயபக்தியினால் அதிர்ச்சியூட்டும்படியான நிலைமைக்குள்ளாயினர், அது மற்றொரு கிறிஸ்துமஸாய் உள்ளது, அதே இயற்கைக்கு மேம்பட்ட ஒளி பிரகாசிக்கிறது. அது அநேகரை வித்தியாசமான நடைமுறை வாழ்க்கையிலிருந்து வழிநடத்தியுள்ளது. அவர்கள் உம்முடைய வார்த்தை வாசிக்கப்பட்டதையும், பிரசங்கிக்கப்பட்டதையும் கேட்டிருக்கிறார்கள், இப்பொழுதோ நீர் வந்து வார்த்தையை உறுதிப்படுத்துவதைக் காணட்டும்.
240. வேதம், "சீஷர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் வார்த்தையைப் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்” என்று உரைத்துள்ளது, அது வெளிப்புற வெளிப்பாடாய், வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருந்த கடைசி காரியங்களாயிருந்தன. இப்பொழுது நாங்கள் அதை மீண்டும் காண்கிறோம். கர்த்தாவே, வருகையோ சமீபித்திருக்கிறது. இரக்கமாயிரும். இங்கே இந்தக் காலையில் வியாதியுள்ள யாவரையும் சுகப்படுத்தும். உம்முடைய ஆவி செம்மையானதாய் இருக்கிறது. அது வல்லமையுள்ளதாயிருக்கிறது, அது இங்கே உள்ளது.
241. கர்த்தாவே, இங்கே வந்துள்ள அநேகர் கூடாரத்திலுள்ள ஜனங்களாயிருக்கிறார்கள். நீர் அவர்களை அழைக்கும்படி அவர்களுக்கு இரக்கமுள்ளவராயிருந்து வருகிறீர்.
242. கர்த்தாவே, அதே சமயத்தில் அது இப்பொழுது முழுக்கூட்டத்தாரின் மீதும் உள்ளது. அந்த மகத்தான ஷெக்கினா மகிமை, உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவின் மகத்தான வல்லமை, வானவில்லின் அநேக வண்ணங்கள், அல்பாவும், ஒமேகாவும், ஆதியும்" அந்தமுமானவர், விடிவெள்ளி நட்சத்திரம், சாரோனின் ரோஜா இங்கே இருக்கிறார். கர்த்தாவே குணப்படுத்தும். அவர்கள் உம்முடையக் கிருபை மூலமாகக் குணப்படுவார்கள் என்றே நாங்கள் அழுத்தந்திருத்தமாக உரைக்கிறோம். கர்த்தாவே, அதை விசுவாசிக்கும்படியாக அவர்களுக்கு விசுவாசத்தைத் தாரும், தேவனுடைய மகிமைக்காக அதை இப்பொழுதே ஏற்றுக்கொள்வார்களாக. சுகவீனமான ஒவ்வொரு நபரும் சுகமடைவார்களாக.
243. தவறாயிருக்கிற ஒவ்வொரு நபரும், தங்களுடையத் தோழரோடு தவறாக ஜீவிக்கிறவர்கள் மன்னிக்கப்டுவார்களாக. புகைப்பிடிக்கிற அல்லது மதுபானம் அருந்துகிற ஒவ்வொரு நபரும் மன்னிக்கப்படுவார்களாக. இப்பொழுது இங்கு உள்ள சர்வ வியாபியான தேவனால் அவர்களுடையப் பாவங்கள் இரத்தத்தின் கீழ் இருப்பதாக. அநேகமாக அவர்கள் தங்களுடைய ஜீவியம் முழுவதிலும் அவரண்டை மிகவும் நெருங்கினவர்களாயிருப்பார்களாக. இப்பொழுது இது ஏற்றுக்கொள்ளப்பட அருள்புரியும்.
244. ஓ தேவனாகியக் கர்த்தாவே, எங்களுடைய மகத்தான ராஜாவே, இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகைப் பருவத்தில் நாங்கள் உம்முடைய நாமத்தை தொழுதுகொள்ளுகையில் எங்களுக்குச் செவிகொடும். ஒரு சாந்தா கிளாஸில் அல்ல; ஆனால் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துள்ள இயேசு ஜீவனுள்ள ஒருவராய் தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் தம்மைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். ஓ கர்த்தாவே, நீரே தேவன், நீர் மாத்திரமே தேவன், உம்மையல்லாமல் வேறு யாருமில்லையே. இந்தச் சிறியத் தாழ்மையான ஸ்தலத்தில் அவருடையப் பிரசன்னத்தில் அமர்ந்திருக்கும் சிலாக்கியம் எங்களுக்கு உண்டாயிருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்தாமே தம்மைத் தாழ்த்திக் கொண்டு எங்கள் மத்தியில் வந்தாரே. நாங்கள் இதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். அவருடையப் பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! நாங்கள் காலையிலிருந்து இரவு வரையிலுமாக, முழுமையாய் இரவு நேரங்களினூடாகவும் அவருக்குத் துதி செலுத்துவோமாக, எங்களுடைய இருதயங்கள் பாடல்களையும், யேகோவாவின் துதிகளையும் பாடுவதாக. அவருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம் உண்டாவதாக!
245. கர்த்தாவே, இந்த உம்முடையப் பிள்ளைகளை, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக, உம்முடையச் செட்டைகளின் கீழே இவர்களைச் சேர்த்துக்கொள்ளும். அவர்களை முழு ஈடுபாடு கொண்ட ஜீவியத்திற்குள்ளாகவும், மகிழ்ச்சியான ஜீவியத்திற்கும், எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மைப்போன்றத் தூய்மையான ஜீவியத்திற்கும் வழிநடத்தும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அவர்களுக்குத் தாரும். கர்த்தாவே, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு புத்துயிரளியும், நீர் அவர்களுக்குள் வாசம் செய்து ஜீவிக்கும்படியாகவும், அவர்கள் மூலமாகக் கிரியை நடப்பிக்கும்படியான உம்முடைய சீஷர்களாயிருக்கும்படியாவும் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக்கும். கர்த்தாவே, இதை அருளும். ஏனெனில் சீக்கிரத்தில் ஆகாயத்தில் காட்சியளிக்கப் போகும் எங்களுடையக் கர்த்தர் வருவார் என்றும், நாங்கள் நேசிக்கிற அவரைக் காண்போம் என்றுமே நாங்கள் விசுவாசித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இதற்காக எங்களுடையக் கர்த்தராகிய இயேசுவின் மூலமாக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
246. இப்பொழுது நம்முடையத் தலைகள் வணங்கியிருப்பதோடு, நான் ஆராதனையைப் போதகரிடம் ஒப்படைக்கிறேன்.